June 15, 2011.... AL-IHZAN Local News
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் புதன்கிழமை அதிகாலை 3.35 அளவில் வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் என்ற தலைப்பிலான யுத்தக்குற்ற ஆவணக்காணொளியை இலங்கை அரசாங்கம் முழுமையாக மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது. பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
உயிரை பிணையாக வைத்து வாழ்ந்து வந்த மக்களை விடுவித்தெடுத்த புகழ் வரலாற்றில் இலங்கை இராணுவத்தைச் சாரும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை இராணுவத்தின் மனிதாபிமானம் தெளிவாகுவதாகவும் பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலங்கை இராணுவத்தின் யுத்தக்குற்றம் தொடர்பான காணொளி காட்சிகளை சுமார் ஒரு மணிநேர ஆவணத்திரைப்படமாகத் தொகுத்து பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி லண்டன் நேரப்படி நேற்றிரவு 11.05க்கு (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.35 மணி) ஒளிபரப்பியது.
இந்த காணொளிகளின் அடிப்படையில் வன்னியில் பொது மக்கள் வாழ்ந்த இடத்திலும், வைத்தியசாலைகளிலும் இலங்கை இராணுவத்தினர் ஷெல் தாக்குதலை மேற்கொண்டதான காட்சிகள் காணப்படுகின்றன. அத்துடன், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் இதன்போது காயமடைந்து இரத்தம்தோய்ந்து கதறி அழுவதை அதில் அவதானிக்க முடிகிறது.
மேலும் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் நிர்வாணமாக இறந்த நிலையில் டிரக் வண்டிகளில் ஏற்றப்படுவதோடு, நிர்வாணமாகக் காணப்படுபவர்களை நோக்கி பேசப்படும் தகாத வார்த்தைகளையும் சனல் 4 ஒளிபரப்பியுள்ளது. புலிகள் இயக்கத்தின் ஆண் போராளிகள் சுட்டுக்கொள்ளப்படுவது போன்ற காட்சிகளை முன்னர் ஒளிபரப்பிய சனல் 4, தற்போது பெண் போராளிகளும் கண், கை கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொள்ளப்படுவதான காட்சிகளையும் ஒளிபரப்பியுள்ளது.
News: Yarlmuslim

0 கருத்துரைகள் :
Post a Comment