animated gif how to

துருக்கியில் இஸ்லாமிய அடித்தளம் கொண்ட அரசாங்கம் மீண்டும் ஆட்சியமைக்கிறது

June 13, 2011 |

June 13, 2011.... AL-IHZAN World News
துருக்கி பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றது. எர்டோகன் 3-வது முறையாக பிரதமர் ஆகிறார்.   துருக்கி பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. அதில் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சிக்கும் (ஏ.கே.பி.), குடியரசு மக்கள் கட்சிக்கும் (சி.எச்.பி.) கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் 7 கோடியே 30 லட்சம் மக்கள் தொகை உள்ள துருக்கியில் 5 கோடி பேர் வாக்கு அளிக்க தகுதி பெற்று இருந்தனர். நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் 84.5 சதவீதம் பேர் வாக்களித்தனர்.   ஓட்டுப்பதிவு முடிந்த வுடன் உடனடியாக ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. அதில் ஆளும் ஏ.கே.பி. கட்சி 49.9 சதவீதம் ஓட்டுகள் பெற்றது.
தேர்தல் முடிவுகள்......
இதன் மூலம் 550 தொகுதிகளை கொண்ட பாராளுமன்றத்தில் 325 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து பிரதமர் ரிசப் தயிப் எர்டோகன் 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்கிறார்.

கடந்த 2002-ம் ஆண்டு முதல் இவர் தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து வரு கிறார். தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து துருக்கியில் ஆளுங் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். லிஷ்மிர், டமாஸ்கஸ், அஸ் காரா, ரமல்லா உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ஆனந்த நடனமாடி வருகின்றனர். இதற்கிடையே ஆளுங் கட்சிக்கு அடுத்த படியாக சி.எச்.பி. கட்சிக்கு 25.9 சத வீதமும், எம்.எச்.பி. கட்சிக்கு 13 சதவீதமும் ஓட்டுகள் கிடைத்தன.


0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!