animated gif how to

காத்தான்குடி செய்திகளும் பிராந்திய அரசியலும்

June 30, 2011 |

June 30, 2011.... AL-IHZAN Local News
M.ஷாமில் முஹம்மட்
கடந்த வியாழகிழமை 23.06.2010  தொடக்கம் BBC தமிழ் ,ஆங்கிலம் மற்றும்  உள்நாட்டு ஆங்கில , தமிழ் , சிங்கள ஊடகங்களிலும் காத்தான்குடி தொடர்பான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன BBC தமிழ்   ‘காத்தான்குடி: பள்ளிப்பெண்கள் தடுத்துவைப்பு’ என்ற தலைப்பில் இது தொடர்பான அதன் முதல் செய்தியை வெளிட்டது இலங்கையின் கிழக்கு மாகாணம் தொடர்பில் தீவிரவாதத்துடனும், தெற்காசியாவின் பயங்கரவாத அமைப்புகள் என்று தெரிவிக்கப்பட்டும் அமைப்புகளுடனும் தொடர்பு படுத்தி பல செய்திகள் இதற்கு முன்னர் வெளிவந்துள்ளன.
அவைகள் உரிய முறையில் இலங்கையின் அரச தரப்பினால் மறுக்கப்பட்டும் உள்ளன இந்த நிலையில் கடந்த வியாழகிழமை தொடக்கம் மீண்டும் கிழக்கு மாகாண காத்தான்குடி பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்றுக்கு பெரிய அளவிலான ஊடக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. கடும்போக்கு இஸ்லாம் ,Radical Islam இஸ்லாமிய அடிப்படைவாதம் ,Islamic Fundamentalism என்ற வார்த்தை பிரயோகங்களுடன் மஸ்ஜித்  இஸ்லாமிய அலுவலகம் என்பன வற்றை இணைத்தும் தீவிரவாதம், கடும்போக்கு என்பனவற்றை இஸ்லாமிய வாலிபர்கள் என்பதுடன் இணைத்தும்...
செய்திகள் வெளிவந்துள்ளன இவ்வாறான செய்திகள் உள்ளநாட்டில் பெரும்பாலான ஆங்கில , சிங்கள, தமிழ் ஊடகங்களிலும் வெளிவந்த வண்ணமுள்ளன இதற்கு முன்னர் வெளியான தகவகள் செய்திகள் என்பன வற்றை விடவும் இது கனமானதாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்
ஏனென்றால் முன்பு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் ஆயுத குழுக்களுடன் தொடர்பானவை என்பதால் அவற்றை இலகுவாக முஸ்லிம் சமூகத்தாலும் அரசாங்கத்தினாலும் மறுக்க முடிந்தது ஆனால் தற்போது வெளியிடப்படும் தகவல்கள் மஸ்ஜித் , தாடி,தொப்பி, ஹிஜாப் , நிகாப், அரபு மொழி போன்றவற்றை மேற்கு மிடியாக்கள் உலக பயங்கரவாதத்தின் அடையாளங்களாக வரைவிலக்கணப் படுத்தியுள்ள மாதிரிக்கு அமைவாக இந்த செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளது.
புலிகள் ஆயதங்களுடன் செயல்பட்டுகொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் ஜிஹாத் அமைப்புகள் இருக்கிறது , உருவாகிவருகின்றது , பயிற்சி பெறுகின்றார்கள் , பாகிஸ்தானில் 2000 பேர் சென்று பயங்கர ஆயுத பயிற்சி பெற்று வந்துள்ளார்கள், ஆயுதங்களை வைத்துள்ளார்கள் என்று அடிக்கடி இலங்கை, இந்திய ஊடகத் துறை ஜிஹாத்துடன் தொடர்பு படுத்தி செய்திகளை பதிவு செய்து வந்ததை நாம் அறிவேம் இந்த போலி ஜிஹாத் செய்திகளை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் புலிகளும் புலிசார்பு ஊடகங்களும்தான் முஸ்லிம் பிரதேசங்களை புலிகளின் பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க அரசால் உருவாக்கப்பட்ட ஊர் காவல் படையை அல்லது தற்பாதுகாப்பு கருதி வழங்கப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்தவர்களை இவர்கள் ஜிஹாத் என்றும் இது சர்வதேச தொடர்புகளை கொண்ட பாரிய அமைப்பு என்றும் காட்ட முற்பட்டிருந்தனர் .
இந்த தெளிவான உள்நோக்கம் கொண்ட கதைகள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளினாலும் புலிகளின் ஆதரவு ஊடகங்களாலும் பலமாக அழுத்தி சொல்லப்பட்டது இதற்கு பின்னரான காலப்பகுதியில் சிங்கள, ஆங்கில ஊடங்களுக்கும் புலிகளின் அதோ ஜிஹாத் கதையை தாமும் அழுத்தத்துடன் முழங்கினார்கள் இந்திய இராணுவ உளவு அதிகாரிகளிடம் இருந்து பெற்றதாக அமெரிக்க அதிகாரி Admiral Robert Willard, Commander of the US Pacific Command- கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிழக்குப்பகுதியில் லக்ஷர் – இ – தொய்பா இயக்கம் இயங்கிவந்ததாகவும் . 1990 களில் இருந்து செயற்படும் இவ் அமைப்பு பொஸ்னியா மத்திய ஆசிய குடியரசு செச்சினியா மற்றும் தாஜிகிஸ்தானில் இதுவரை இயங்கிவந்ததாகவும் , சிலகாலத்துக்கு முன்னார் இது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இயங்கி வந்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் இந்திய ஊடகங்கள பல ஆண்டுகளாக இவ்வாறான கதைகளைத்தான் சொல்லிவந்துள்ளது அமெரிக்க செய்தியை தொடந்து உள்நாட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு சில சிங்கள ஊடகங்கள் இனி இவர்களைத்தான் ஒரு கை பார்க்க வேண்டும் என்றும்   இந்த நாடு புலிகளின் பயங்கரவாதத்தில் இருந்து தப்பி இருக்கலாம் . ஆனால் வெளிவரும் ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது மிக மோசமான இஸ்லாமிய அடிபடைவாதிகளால் பிரச்சினைகள் விரைவில் வரலாம் என்று தெரிகின்றது என்றும் இலங்கை சந்திக்க போகும் அடுத்த பிரச்சினை இதுதான் – The country may have come out of one of the most difficult conflicts in its history last year, but according to evidence that is surfacing, it could be plunged into a conflict with even more radical Islamic fundamentalists soon என்றும் கூறும் அளவுக்கு செய்திகளை பதிவு செய்தன இவற்றை நாம் அறிவேம்.
அதற்கு முன்னர் இந்திய சிறையில் உள்ள கஷ்மீர் விடுதலை போராட்ட அமைப்பு ஒன்றின் முக்கிய தலைவர் சிறையில் இருந்த வண்ணம் இலங்கைக்கு தொடர்பு கொண்டு குறித்த இலக்கங்களுடன் தொடரான உரையாடல்களில் ஈடுபட்டிருந்தமை கண்டுபிடிக்கபட்டுள்ளது என்றும் செய்திகளை வெளியிட்டது.
புலிகளின் ஆயுத போராட்டம் அழிக்கப்பட்ட பின்னரும் முன்னரும் உள்நாட்டு ஊடகங்கள் இதை எழுதுவதற்கு இந்திய , அமெரிக்க தகவல்களும் ,சில வெளிநாட்டு ஊடகங்களும் மற்றும் எமது சமுகத்தில் உள்ள சிலரும், புலிகளின் பிரச்சாரமும் காரணமாக அமைந்தன. இயக்க , நிறுவன , மத்ஹப் , தரீகா முரண்பாடுகள் காரணமாக சில நபர்கள் ஊடகங்களுக்கும் , அரச அதிகாரிகளுக்கும் தெரிவித்து வந்த கருத்துகள் சிங்கள ஆங்கில ஊடகங்கள் முஸ்லிம்கள் பற்றிய பாரதுரமான கருத்துகளை கூற தூண்டியிருந்தது. இந்த செய்திகளில் சிலவற்றை புலிகளின் முன்னாள் கிழக்கு இராணுவ தளபதியும் தற்போதைய பிரதிமைச்சருமான கருணா என்ற முரளிதரன் உட்பட அரசாங்க அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இதேவேளை இலங்கையில் நடைபெறும் அரசியல் நடவடிக்கைகள் ஆசிய நாடுகளை பாதிக்கும் முறைமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்திய அரசாங்கத்திடம் விசேட அறிக்கையொன்று கோரப்பட்டது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கோரிக்கையினைக் கருத்தில் கொண்டுள்ள இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் நகர்வுகள் என்பன தொடர்பான அறிக்கைகளை தயாரித்து அமெரிக்காவுக்கு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாயின.
அந்த தொடரில் இந்தியா கடந்த ஆண்டு 2010 செப்டெம்பரில் மீண்டும் வெளியிட்ட தகவலில் முஸ்லிம் தீவிரவாத அமைப்பு ஒன்றில் உறுப்பினர் ஒருவர், தான் கொழும்பில் பயிற்சி பெற்றதாக தெரிவித்துதாக தெரிவித்தது அதாவது இந்தியா புனே நகரிலுள்ள ஜேர்மன் பேக்கரியொன்றின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட 29 வயதான மிர்ஸா ஹிமாயத் பெய்க் என்பவர் தான் கொழும்பில் பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ளார் என்று தெரிவித்தது.
இதை தொடர்ந்து பல ஊடகங்கள் தமது கற்பனைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அனைத்தையும் எழுத தொடங்கின. முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அந்த தகவல்கள் பாரிய அதிர்வளைகளை ஏற்படுத்தியது அந்த காலபகுதிலும் lankamuslim.org இல் அந்த செய்திகள் தொடர்பில் ஒரு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளேன். அன்று வெளியான அந்த தகவல் பற்றி கருத்து தெரிவித்த இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் எந்தவொரு முஸ்லிம் தீவிரவாதக் குழுவும் செயற்படவில்லை எனவும் பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு தீவிரவாத குழுவும் இலங்கையில் பயிற்சி பெறவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார் இதை தொடர்ந்து அந்த கதைகளின் கற்பனை வேகம் குறைவடைந்தது .
இந்த செய்திகளுடன் ஒரு விடையத்தை நோக்கவேண்டும் அதாவது இந்தியா, இலங்கை பிரச்சினைகளை   பயன்படுத்தி,  இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க முனைந்தது வந்துள்ளது என்பதும்   இந்திய இலங்கை உறவு முறையை சீனா, இந்தியா பிராந்திய போட்டியே தீர்மானித்துள்ளது என்பதும். பல கட்டங்களில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முறுகல் நிலையில் இருந்து வந்துள்ளதும் கடந்த 50 ஆண்டுகால கால வரலாற்றில் இது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது . இலங்கை இந்தியாவுடன் முரண்படும்போது அல்லது இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்து நகர்ந்து செல்ல  முற்படும்போதும் இந்தியா இலங்கைக்கு எதிராக மிகவும் பாதகமான சதிவேலைகளை செய்துவந்துள்ளது இந்தியா வடக்கு கிழக்கு தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சி , ஆயுதம் மற்றும் பணத்தை வழங்கி, அவற்றை தமது பிராந்திய ஆதிக்க நலனுக்கு ஏற்ற  படையாக உருவாக்க முயன்றும் வந்துள்ளது என்பது சுட்டிகாட்டதக்கது.  இந்திய தற்போது இலங்கை மீதான  தனது பிடியை இழந்து வருகின்றது என்பதாக நிகழ்வுகள் காட்டுகின்றது. அதேவேளை இலங்கை ரஷியா சீனா சார்பான போக்கை வேகமாக எடுத்துவருவதாகவும் இலங்கையின் அணிசேரா கொள்கையில் இருந்து தற்போதைய அரசாங்கம் விலகி செல்வதாகவும் சுட்டிகாட்ட படுவதும் இங்கு நோக்கத்தக்கது .
இலங்கை மீதான பிடி வேகமாக நகர்வதால் புதிய பிரச்சினை ஒன்றை உருவாக்கும் தேவை இந்தியாவுக்கு இருக்கிறது என்று கூறலாம்  அந்த பிரச்சினை அமெரிக்க நலன் சார்ந்ததாகவும் இருக்கவேண்டும் அப்போதுதான் அமெரிக்காவின் ஆசீர்வாதமும் அதற்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது அதற்கு இஸ்லாமிய அடிப்படை வாதம் என்பது சிறந்த ஆயுதம்.
எமது பிராந்தியத்தில் பல நாடுகளில் முஸ்லிம்களும் பௌத்தர்களுக்கும் இடையிலான முறுகல் நிலை ஏற்பட்டு வருகின்றது. ஏற்பட்டு வருகின்றது என்பதை விட ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதுதான் சரியானது சீனாவின் மேலாதிக்கத்தை கட்டுபடுத்த பௌத்தர்களை   முஸ்லிம்களுடன்  மோதிவிட தொடங்கியுள்ளது மேற்கு.
பௌத்தர்களை 80 வீதம் கொண்டுள்ள சீனா, சிங்கியாங் பிரதேசத்தில் முஸ்லிம்களை அடிப்படை வாதிகள் என்று கூறி ஒடுக்கி வருகின்றது அதற்கு எதிராக குரல் எழுப்பும் போராளிகளுக்கு தான் உதவுவதாகவும்  அந்த  குரல் ஜனநாயகத்தின் குரல் என்றும் அமெரிக்க கூறிவருகின்றது இதை வைத்து அங்கு அரசியல் செய்ய முயன்றும் வருகின்றது.
அதேபோன்று 90 வீதம் பௌத்தர்களை கொண்டுள்ள மியன்மாரிலும் அங்கு தோன்றியுள்ள பௌத்தர்களும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினையில் விரலை விட்டு  ஆட்டுகின்றது அமெரிக்கா. பௌத்தர்களை 90 வீதம்  கொண்டுள்ள தாய்லாந்திலும் முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களும் இடையில் பிரச்சினைகள் நிறைவாக உண்டு இந்த வகையில் தெற்காசியா பிராந்திய நாடுகளில் ஒன்றான இலங்கையும் 70 வீதம் பௌத்தர்களை கொண்டுள்ளது  இங்கும் பெளத்த இஸ்லாமிய பிரச்சினைகளை உருவாக்க மேலாதிக்க சக்திகள் முயற்சிக்கலாம் என்பது மிகையல்ல.
பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் இஸ்லாமிய எழுச்சியையும் பௌத்தர்களையும்  மோத விட தேவையான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது என்று கூறலாம் இதன் ஒரு கட்டமைப்புதான் ஊடகங்கள் அதன் செய்திகள் அண்மையில் மியன்மாரில் நடந்த சம்பவங்கள் இதற்கு ஒரு எடுத்துக்  காட்டு. ஆகவே ஒரு சிறு செய்திக்கு பினால் பிராந்தியத்தின் அரசியலே இருக்கலாம் .
முஸ்லிம்கள் மத்தியில் ஆயுத குழுக்கள் இருக்கிறது ஆயுதங்கள் வைத்திருகின்றார்கள் ஆயுத பயிற்சி பெற்றுள்ளார்கள் என்றெல்லாம் கூறப்பட்ட கதைகளை விடவும் மிகவும் பாரமான ஒரு கதைதான் தற்போது இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் , கடும்போக்கு இஸ்லாம் என்ற செய்திகள் இந்த செய்திகள் உள்நாட்டு ஊடகங்களுக்கு மேலும் பல கற்பனை கதைகளை சொல்ல வழிசமைத்துள்ளது . இலங்கையின் இனவாத சக்திகள் இந்த செய்திகளை வைத்து பல காலம் அரசியல் செய்யமுடியும் என்பதும் குறிபிடத்தக்கது.
கடந்த வியாழகிழமை 23 திகதி வெளிவந்துள்ள செய்தியில் ‘காத்தான்குடி: பள்ளிப்பெண்கள் தடுத்துவைப்பு ‘ என்ற தலைப்பில் ‘இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில், செவ்வாய்க்கிழமை , காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு முஸ்லீம் பள்ளிப் பெண்கள், தனியார் இணைய மையம் ஒன்றில் ஆபாச படத்தைப்பார்த்ததாகக் கூறி, வாலிபர்கள் காத்தான்குடியின் பள்ளிவாசல் சம்மேளன அலுவலகத்திலும் வைத்து, பொதுமக்களைக் கூட்டி பிரச்சினையை பெரிது படுத்த முயன்றதாகவும், பின்னர் காவல்துறையினர் வந்து அவர்களை மீட்டதாகவும் செய்திகள் வந்தன’ என்றும்
துணை அமைச்சர் , எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உண்மையில் பெண்கள் அந்த மாதிரி காரியங்களில் ஈடுபட்டாலும், அது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது, காவல்துறை அதிகாரிகள்தானே தவிர மற்றவர்கள் அல்ல, தனி நபர்கள் இந்த விஷயத்தில் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார். என்றும் ஆனால் இது ஒரு மத அடிப்படைவாதப் பிரச்சினை அல்ல, கலாச்சாரப் பிரச்சினையாகப் பார்க்கலாம் என்றும் அவர் கூறினார் என்று தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக -26.6.2011 -அன்று  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளம் பத்திரிகை மாநாடொன்றை நடாத்தியது அதில் காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் கலாசாரத்திற்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்கள் என்று உணர்ச்சி வசப்பட்ட சில இளைஞர்கள் அம்மாணவிகளை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு அழைத்து வந்தனர் இந்த விடையத்தை கையாள விரும்பாத சம்மேளனம் மாணவியரின் பெற்றோரை அழைக்க கையளிக்க முற்பட்டபோது அங்கு திரண்டிருந்த இளைஞர்களால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பொலிசார் வரவழைக்கப்பட்டு பெற்றோரிடம் அந்த மாணவியரை ஒப்படைப்பதற்காக அவர்களை பொலிசாரிடம் கையளித்தோம் மாறாக இச்சம்பவத்திற்கும் பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லையென  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம். சுபைர் தெரிவிதிருந்தார்.
பின்னர் ஜூன் 28 ஆம் திகதி ‘காத்தான்குடி சம்பவம் குறித்து விசாரணை’ என்ற தலைப்பில் மேலும் ஒரு செய்தியை BBC தமிழ் பிரிவு வெளியிட்டது அதில் ‘கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி நகர் முஸ்லிம்களை மட்டும் வாழும் பிரதேசம். இங்கு சமீப காலமாக மத அடிப்படைவாதம் தலை தூக்கி வருகிறது என்பது போன்ற கவலைகள் சில மட்டத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன’. என்று குறிப்பிட்டதுடன் அரபு மொழியில் காத்தான்குடி நகரத்தில் வைக்கபட்டுள்ள வீதி பெயர் பலகையின் படம் ஒன்றையும் பதிவு செய்திருந்தது .
பின்னர் BBC தமிழ் பிரிவில் வெளியான செய்தி ஆங்கில பதிப்பிலும் 28 அன்று வெளியாகியது Sri Lanka police investigate attack on teenage girls என்ற தலைப்பில் வெளியான செய்தியில்  An incident of this sort is extremely unusual for Sri Lanka. The case has fuelled concern about a rise in radical Islam in that area. என்றும் குறிபிடப்பட்டுள்ளது இதை தோர்ந்து இந்த தகவல் சில மாற்றங்களுடன் பல உள்ளூர் ஊடகங்களில் வெளிவந்தன
பின்னர் நேற்று 29.06.2011 அன்று “பெண்கள் தவறு செய்யவில்லை” என்ற தலைப்பில் BBC தமிழ் பிரிவிலும். இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் சில நபர்களால், கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரு பதின்ம வயதுப் பெண்களும் குற்றமற்றவர்கள் என்று உள்ளூர் பள்ளிவாசல்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. அவர்கள் மீது குற்றமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் பகிரங்கமாக அறிவித்தன என்றும். மட்டக்களப்பு நீதிபதி உத்தரவிட்டதாகக் கூறி காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று கூறும் அறிவித்தல் புதனன்று வெளியிடப்பட்டதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.என்றும் தெரிவித்ருந்தது  அதன் ஆங்கில பதிப்பிலும் Sri Lanka mosques exonerate ‘pornography girls’ என்ற இதை ஒத்த தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த விடயங்கள் அரசியல் நகர்வுகள் பற்றிய பார்வை எமது சமூகத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டும் இந்த சம்பவங்கள் கூட நான் இதற்கு முன்னர் எழுதிய ‘முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சினைகளை கையாள ஒரு பொறிமுறை வேண்டும்’ என்ற தலைப்பிலான கட்டுரையின் கோரிக்கையை வேண்டிநிற்கின்றது முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானத்துடன் பிரச்சினைகளை எதிர்கொள்ள தக்க பொறிமுறைகளுடன் இருக்கவேண்டியது கட்டாயமானது.  இந்த கட்டுரையில் செய்திகளுக்கு பின்னால் பிராந்திய அரசியல் இருக்க முடியும்   என்பதை மையமாக கொண்டு எழுதியிருந்தாலும் இங்கு கவனிக்க படவேண்டிய விடயங்கள் பல பக்கங்களில் உண்டு.
முஸ்லிம் சமூகத்தினுள் எழும் பிரச்சினைகளை கையாள தெளிவான வழிகாட்டல் இன்மையால் வாலிபர்கள் சிலர் உணர்ச்சி வசப்பட்டதும், அந்த இரு யுவதிகள் அவமானம் அடைந்துள்ளதும், பெற்றோர்கள் கையாண்டு வழிப்படுத்தவேண்டிய தவறுகளை இஸ்லாத்துக்கு முரணாக ஊரை கூட்டி பகிரங்க படுத்தியதும், உண்மையில் அந்த பெண்கள் தவறு செய்திருந்தாலும் மறைக்க வேண்டிய பாவத்தை பகிரங்க படுத்தியதும் தவறாகும். தவறை திருத்த இஸ்லாம் போதிக்கும் வழிமுறைகளை அறியாத சமூக அக்கரையுள்ள சிலரினால் இந்த தவறுகள் இடம்பெற்றிருப்பது கவலைக்குரியது.
அதை தொடர்ந்து காத்தான்குடி சம்மேளனம் நிகாப் என்ற முகத்திரை அணித்து மாணவியர், பெண்களை நடமாடவேண்டாம் என்று கேட்டுள்ளதாக தெரியவருகின்றது இதுவும் தவறானதாகும் நிகாப்  தனிப்பட்ட உரிமையுடனும் சமந்தப்பட்டது நிகாப் போடுங்கள் என்று கோரவோ போடாதிர்கள் என்று கோரவோ எவருக்கும் முடியாது அதேவேளை ஊடகங்கள் இந்த விடையத்தில் தங்களுக்கு தேவையான கவனத்தை கொடுத்துள்ளது தகவலை நாங்கள்தான் அவர்களுக்கு வழங்கியிருகின்றோம் எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமல் பார்த்துகொள்வது அனைவரினதும் சமூக கடமை
இலங்கையில் ஷரியா குற்றவியல் சட்டம் நடைமுறையில் இல்லை என்பதுடன் ஷரியா நடைமுறையில் இருக்கும் ஒரு நாட்டிலும் ஒரு தவறுக்கு போதுமான ஆதாரங்கள் இன்றி அதை வெளிபடுத்தினால் அந்த சம்பவம் உண்மையாக இருந்தாலும் இஸ்லாம் அதை அவதூராகத்தான் பார்க்கின்றது போதுமான ஆதாரங்கள் இன்றி நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் சொன்னவருக்கு அதை வெளியில் சொன்ன காரணத்திற்காக தண்டனை கிடைக்கும் என்பது ஷரியா வழிமுறை. காரணம் ஒரு மனிதனின் மானதிற்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம் அவ்வளவு உயர்ந்தது . இங்கு வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் இஸ்லாத்துக்கு முரணான ஒரு சம்பவத்தை இஸ்லாமிய சாயம் பூசி அதை ஊடகங்கள் தமது நோக்கங்களுக்கு ஏற்ப செய்தி சொல்வதுதான்.
முஸ்லிம் சமூகம் விழிப்பாக இருப்பதுடன் எதிர்கொள்ளபோகும் சவால்களை எதிர்கொள்ள மிகவும் பொருத்தமான பொறிமுறை ஒன்றை தாமதம் இன்றி உருவாக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சம்பவங்களும் போதிக்கின்றது .
News: Lankamuslim

1 கருத்துரைகள் :

M C Rasmin said...

ஆண்கள் எதுவும் செய்யலாம் ஆனால் பெண்கள் கொஞ்சமும் சறுக்கிவிடக்கூடாது என்தில் உள்ள கண்மூடித்தனமான குறுட்டு ஆர்வத்தை சிலர் சமூகத்தின் பேரிலான அக்கறை என்று நினைப்பதுண்டு. காத்தான்குடியில் நடந்த இந்த சம்பவத்தை வேறு அரசியல் சமூகக் காரணங்களுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது நல்லதுதான். ஆனால், எல்லாவற்றையும் விட இந்த சமூகத்தில் பெண்களை ஆன்களுக்குச் சமமானவர்களாக

Post a Comment

Flag Counter

Free counters!