June 06, 2011.... AL-IHZAN Local News
வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதில் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆயிரக் கணக்கான காணிகள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பான அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன காணியை புலிகளுக்கு வழங்க மறுத்தவர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விடுதலை புலிகளினால் பலவந்தமாக குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள காணிகளை உரியவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹகீம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார் என்று தெரியவருகின்றது...................
காணிகளை உரியவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் நாட்டின் காணி சட்டத்தில் திருத்தங்களை செய்ய அமைச்சர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார் வடக்கு , கிழக்கு பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் சொந்தமான சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகள் மற்றும் பல புலிகளுக்கு எதிரான வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளையும் உரியவர்கள் இதன் மூலம் மீட்கமுடியும் என்று நம்பப்படுகின்றது.விடுதலை புலிகளினால் பலவந்தமாக குறைந்த விலையில் வாங்கப்பட்ட காணிகள் ,கடைகள் தொடர்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் கடந்த இரண்டு வருட காலமாக தமது பிரச்சினைகளை முன்வைத்து வருகின்றனர் அதேவேளை ஏறாவூரில் ௨௦௦ க்கும் மேற்பட்ட நிலங்கள் பரிபோனத்தை தொடர்ந்து ஏறாவூர் பிரதேச முஸ்லிம்கள் நீதியமைச்சரிடன் நேரடியாக முறையிட்டதை தொடர்ந்து இந்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் காணிகளை உரியவர்களுக்கு மீட்டு கொடுக்கும் முதல் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது நீதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் எம் .எச் . எம் .சல்மான் தலைமயில் இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது.
ஏறாவூர் போன்று மட்டகளப்பு, ஓட்டமாவடி , வாழைச்சேனை, காத்தான்குடி , போன்ற பிரதேசங்களிலும் இவ்வாறு மிக குறைந்த விலைக்கு முஸ்லிம்களின் பெறுமதியான காணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது அதேபோன்று அம்பாறை, மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பரவலாக இவ்வாறான சம்பவங்கள் குறித்து முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதைவிடவும் அதிகமாக வடமாகாணத்தின் பல பிரதேசங்களில் முஸ்லிம்களின் காணிகள் மட்டுமின்றி பெரும்பான்மை இனத்தவர்களின் காணிகளும் பறிபோய் இருந்ததாக தெரியவந்துள்ளது. காணிகளை குறைந்த விலைக்கு விற்றவர்கள் ஒரு ஏக்கர் காணியை 10000 ரூபாவுக்கே விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது என்று அறிய முடிகின்றது காணிகள் கைமாற்றபட்டபோது அவை சமந்தப்பட்ட அலுவலகங்களின் ஊடாகவே செய்யப்பட்டுள்ளன.
எனவே இவ்வாறான அலுவலகங்களில் இருந்து உரிய ஆணவங்களை மீள பெறுவதில் காணிகளை மிக குறைந்த விலைக்கு வற்புறுத்தலின் பேரில் விற்றோர் எதிர் நோக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்த்து வைக்க ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் வழங்க வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது என்றும் அறிய முடிகின்றது.
News: Lankamuslim
0 கருத்துரைகள் :
Post a Comment