June 02, 2011.... AL-IHZAN World News
குவாண்டனமோ சிறைச்சாலையின் பாதுகாவலராக பணியாற்றி அமெரிக்க படைவீரர் ஒருவர் புனித இஸ்லாத்தை ஏற்றுள்ள நிலையில் அவர் அண்மையில் உம்றா பயணம் மேற்கொணடுள்ளார். இச்சமயம் அவர் சவூதி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியை இங்கு சுருக்கித் தருனகிறோம்.
2003 இல் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தேன். அப்போது எனது பெயர் டெர்ரி ப்ருக் என்பதாகும். பின்னர் குவாண்டனமோ சிறைக்காவலராக நியமிக்கப்பட்டேன். அங்கு முஸ்லிம்கள் நிறைந்திருந்தனர். இதனைக்கண்டு நான் அச்சமுற்றேன் விஷஜந்துக்களுடன் வேலைபார்ப்பதாக உணர்ந்தேன். பின் சில முஸ்லிம் சகோதரர்களுடன் அறிமுகமானேன். தினமும் அவர்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கு வெளியேயிருந்து ...........
இஸ்லாத்தைப் பற்றி கேட்டறிவேன். இஸ்லாத்தை ஏற்றமை மறக்க முடியாத சம்பவம்.
இஸ்லாத்தைப் பற்றி கேட்டறிவேன். இஸ்லாத்தை ஏற்றமை மறக்க முடியாத சம்பவம்.
என்னைச் சுற்றியிருந்தவர்கள் என்னை முஸ்தபா என அழைத்த அந்நிமிடம் என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதது. என்னுடைய வாழ்ககைக்கு சரியான வழியை அல்லாஹ் சிறை எண் 590 இல் இருந்த 'அல் ரஷீதி' மூலமாக கிடைக்கச் செய்தான். எனக்கு இஸ்லாம் எனும் நேர்வழி இருந்தது இதுவரை தெரியாமல் போனது. கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு குவாண்டனாமோ சிறையில்தான் இஸ்லாத்தை ஏற்கும் வாய்ப்பும், மதத்தின் இனிமையும், தூய்மையும், ஒப்பற்ற நேர்வழியையும் பெறமுடிந்தது.
நானும், என்னுடன் இருந்த மற்றும் சில சிறைக் காவலர்களும் இஸ்லாத்தை படித்ததற்காகவும், இஸ்லாத்தை ஏற்றதற்காகவும் அமெரிக்காவின் கொடூரத்திற்கு உள்ளானோம். இராணுவத்திலிருந்து வெளியேற்றப்பட்டோம்.தற்போது நான் இஸ்லாத்தை ஏற்றதைப் பற்றி புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றார்.o
0 கருத்துரைகள் :
Post a Comment