May 27, 2011.... AL-IHZAN Local News
சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறையை அறிமுகப்படுத்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதுடன் அதனை உடனடியாக அமுல்படுத்தும் வகையில் விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளார்.
முஸ்லிம் பயனாளிகளின் நன்மை கருதி சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்து பார்த்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறையினை அறிமுகப்படுத்த அனுமதியளித்துள்ளார்........
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேற்றுக் காலை பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக நீண்ட நேரம் ஆராயப்பட்டு இறுதியில் சமுர்த்தி வங்கிகளில் இஸ்லாமிய வங்கி நடைமுறையை பேணுவதென்றும் முஸ்லிம்கள் அந்த நடைமுறையில் தங்களது நாளாந்த நடவடிக்கைகளை பேணுவதற்கு அனுமதிப்பதெனவும் அது தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
சமுர்த்தி வங்கிகளில் பணியாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்களும் பயனாளி களும் தற்போதைய வட்டியினாலான நடைமுறையில் வியாபாரம் செய்ய வேண்டியிருப்பதனால் இஸ்லாத்திற்கு முரணாக செயற்பட வேண்டியுள்ளது. இதனால் பல்வேறுபட்ட சிரமங்கள் எதிர் நோக்கப்படுவதுடன் மார்க்க ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றது. எனவே இதில் இஸ்லாமிய வங்கி நடைமுறை யினை அறிமுகப்படுத்த வேண்டுமென்பதே நடைமுறையினை அறிமுகப்படுத்த வேண்டுமென்பதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கையாகும்.
நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பொருளாதார அபிவிருத்தியமைச்சின் செயலாளரும் நிதியமைச்சின் செயலாளருமான டாக்டர் பி. பி. ஜயசுந்தர, சமுர்த்தி ஆணையாளர் ஆர்.பி.பி. திலகசிறி, பொருளாதார அமைச் சினுடைய சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், மத்திய வங்கி உத்தியோகத்தர்கள் உள் ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தகவல் – தினகரன
0 கருத்துரைகள் :
Post a Comment