May 29, 2011.... AL-IHZAN World News
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் உள்ள கைதிகள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கடந்த மூன்று வாரங்களாக மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டமொன்றைத் தொடர்ந்தனர். இப் போராட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அவர்கள் முடிவெடுத்திருப்பதாக 'அஸ்ரா' சிறைக்கைதிகள் தொடர்பான கற்கைகளுக்கான மையம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் கடந்த மூன்று வாரகாலம் பரவலாகத் தொடர்ந்து இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக, பலஸ்தீன் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடாத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தற்போது முன்வந்துள்ளது.......
இப்பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில் அல்லது சிறைக்கைதிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறும்பட்சத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் எனக் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
பலஸ்தீன் கைதிகளுக்கு உரிய அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்காமை, நோய்வாய்ப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படாமை, தமது உறவினர்களைக் கிரமமாகச் சந்திக்க அனுமதி மறுப்பு, ஒடுங்கிய இருட்டான சிறைக் கொட்டடிகளில் தனிமைச் சிறையில் அடைத்துவைத்தல், பெண் சிறைக் கைதிகளின் அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுதல், பிரசவத்தின் போதும், குழந்தைக்குப் பாலூட்டும்போதும்கூட கைவிலங்குகளை அகற்றாதிருத்தல், கழுவுநீர் கசியும் பூச்சிகள் நெளியும் துர்நாற்றமான அறைகளில் அடைத்துவைத்தல், மிகக் கடுமையான சித்திரவதைகளை மேற்கொள்ளுதல் முதலான அடிப்படை மனித உரிமைகளுக்கு மாற்றமான முறையில் பலஸ்தீன் ஆண்-பெண் கைதிகள் நடாத்தப்படுவதை எதிர்த்தே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
RSS Feed
May 29, 2011
|




0 கருத்துரைகள் :
Post a Comment