May 25, 2011.... AL-IHZAN Local News
இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம் மக்களை கணக்கி லெடுக்காது அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
பல்கலைக்கழக தலைமைத்துவ பயிற்சி திட்டத்தின் போது முஸ்லிம் மாணவர்களின் கலாச்சாரம் குறித்து கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அதனால் முஸ்லிம் மாணவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துகின்ற போதும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து எந்தவொரு முஸ்லிம் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த அரசு முயற்சிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசின் ஆதரவாளர்களாக உள்ள முஸ்லிம் தரப்பினரும் தமது சுயலாபத்தை கருத்திற்கொண்டு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மௌனம் காத்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துரைகள் :
Post a Comment