animated gif how to

ரிஷானாவின் பரிதாபம் தொடருகிறது

May 24, 2011 |

May 24, 2011.... AL-IHZAN Local News

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண்ணான ரிஷானா நபீக், உளநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பதாகவும் நினைவுகளை மறந்தும் விடயங்களை விளங்கிக்கொள்ளாத தன்மையையும் கொண்டவராகக் காணப்படுவதாகவும் ஏசியன் ரிபியூன் இணையத்தளத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேசமயம், ரிஷானா நபீக்கிற்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென்பதில் இறந்த 4 மாதக் குழந்தையின் தாயார் பிடிவாதமாக வலியுறுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2005 மே 22 முதல் ரிஷானா சிறையில் இருந்து வருகின்றார். 2007 ஜூன் 16 இல் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. சிறைச்சாலையில் நீண்டகாலமாக இருந்து வருவதால் அவரின் மனநிலை பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரின் இந்த உளநலக் கோளாறு தொடர்பான விடயமானது உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டால் அவருக்கான தண்டனையை நிறைவேற்றுவது பிற்போடப்படுமெனவும் அவர் குணமடையும்வரை அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்படுமெனவும் கூறப்படுகிறது. 

இந்த மாதம் 17 ஆம் திகதி இலங்கை கைத்தொழில்துறை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் ரியாத் ஆளுநர் சல்மான் பின் அப்துல் அஸீஸைச் சந்தித்திருந்தார். ரிஷானாவின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!