animated gif how to

பிரான்சில் புர்காவுக்கு தடை இன்று முதல் அமுல்-போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்கள் கைது

April 11, 2011 |

April 11, 2011.... AL-IHZAN World News

பாரீஸ்:பிரான்ஸ் நாட்டில் வலதுசாரி நிக்கோலஸ் சர்கோஸியின் அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா என அழைக்கப்படும் முகத்தை மறைப்பதை தடைச்செய்து பாராளுமன்றத்தில் சட்டமியற்றியது. இச்சட்டம் உலக முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் சர்கோஸியின் அரசு இச்சட்டம் இன்று முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் திரிவது சுதந்திரமாம். முஸ்லிம் பெண்கள் சுயமாக எவ்வித நிர்பந்தமுமின்றி தங்களது கண்ணியத்தை காக்கும் நோக்கில் அணியும் புர்கா அடிமைச் சின்னமாம். சர்கோஸி அரசின் இந்த பாரபட்சமான கறுப்புச் சட்டத்திற்கு எதிராக கடந்த சனிக்கிழமையன்று போராட்டம் நடத்திய 19 புர்கா அணிந்த பெண்கள் உள்பட 50 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
பிரான்ஸில் முகத்தை மறைக்க உதவும் அனைத்து ஆடை வகைகளும் தடைச் செய்யப்பட்டுள்ளன. இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை பர்தா அணியுமாறு கணவரோ அல்லது மார்க்க அறிஞர்களோ வற்புறுத்தினால் அவர்களுக்கு ரூ.19 லட்சத்து 4 ஆயிரத்து 159 அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் முழுவதும் “The Republic lives with its face uncovered” ‘(இந்த குடியரசு தனது முகத்தை மறைக்காமல் வாழ்கிறது)’ என்ற வாசகத்திலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
’சில மாநிலங்களில் இச்சட்டத்தை அமுல்படுத்துவது கடினம்’ என்கிறார் சினர்ஜி போலீஸ் யூனியனின் பேட்ரிஸ் ரிபைரோ.
‘சிறுபான்மை சமூகத்திடம் இச்சட்டம் கொந்தளிப்பை உருவாக்கும்’ என்கிறார் முஹம்மது துஹானே என்ற போலீஸ் அதிகாரி. டெனிஸ் ஜேக்கப் என்ற போலீஸ் அதிகாரி கூறுகையில், “எங்களால் புர்கா அணிந்தவர்களை விரட்டி பிடித்து நேரத்தை வீணடிக்க இயலாது” என தெரிவித்துள்ளார்.
மஸ்ஜிதுக்கு அருகிலோ, மக்கள் வசிக்கும் இடங்களிலோ புர்கா அணிந்த பெண்களை கைது செய்யக்கூடாது என போலீஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரான்சில் 60 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!