animated gif how to

ஆப்கானில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கையை குறைத்து காண்பிக்கும் ஐ.நா

March 26, 2011 |

March 26, 2011.... AL-IHZAN World News

ஆப்கானிஸ்தானில் நேட்டோ தாக்குதலில் கொல்லப்பட்ட சிவிலியன்களின்(சாதாரண மக்கள்) எண்ணிக்கையை ஐ.நா குறைத்துக் காண்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
2010-ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட சிவிலியன்களின் எண்ணிக்கை 80 என ஐ.நாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தாலிபான்களின் நடத்தும் எதிர்ப்புப் போரில் அதிகமான சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக ஐ.நாவின் அறிக்கை கூறுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஐ.நா பணிக்குழுவின் மனித உரிமை பிரிவு ஆப்கான் மனித உரிமை கமிஷனுடன் இணைந்து இவ்வறிக்கையை தயார் செய்திருந்தது. கமிஷனின் உறுப்பினரான நாதிர் நாதிரி இவ்வறிக்கை அபூர்வமானது என ஒப்புக்கொள்கிறார்.
விசாரணை நடத்த சிரமமாக உள்ள பல தாக்குதல்களையும் தாங்கள் தவிர்த்துவிட்டதாக நாதிரி தெரிவிக்கிறார். நேட்டோ ராணுவம் நடத்திய 50க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ஐ.நா குழுவினர் ஆய்வுச்செய்யவில்லை. ஐ.நா குழு ஆய்வுச் செய்த 12 சம்பவங்களில் 80 பேர் கொல்லப்பட்ட விபரம் அடங்கியுள்ளது. ஒவ்வொரு தாக்குதலிலும் ஏழுபேர் கொல்லப்பட்டார்கள் என கணக்கிட்டால் மொத்தம் மரணித்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டும்.
அதேவேளையில், எதிர்ப்புப் போரின் ஒருபகுதியாக நடந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட போலீஸ்காரர்களையும் சிவிலியன்களாக கருதுகிறது ஐ.நா குழுவின் அறிக்கை.
அமெரிக்காவிற்காக சேவை செய்யும் மேயர்களும், மாவட்ட அதிகாரிகளும் ஐ.நாவின் பார்வையில் சிவிலியன்களாவர். இந்த நிபந்தனையின் அடிப்படையில் நேட்டோவின் தாக்குதலில் கொல்லப்பட்ட தாலிபான் போராளிகளும் சிவிலியன்கள்தாம். காரணம் அதில் பலரும் சொந்த வீடுகளில் வைத்து குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!