animated gif how to

இலங்கையில் மீண்டும் சல்மான் ருஸ்தி கதை படமாக்கம் !!

March 14, 2011 |

March 14, 2011.... AL-IHZAN Local News



பிரபல செய்த்தானிய சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஸ்தி 1981 இல் எழுதி வெளியிட்ட நடுநிசி சிறுவர்கள்- Midnight’s Children- என்ற கதையை மீண்டும் இலங்கையில் படமாக்க முயற்சிகள் மேட்கொள்ளபட்டு வருவதாக தெரியவருகின்றது  இந்த படத்தை சர்வதேச விற்பனை முகவரான FilmNation கம்பெனி  அனுசரணையில் இந்திய பிரபல இயக்குனர் தீபா மேத்தாவும்  சல்மான் ருஸ்தியும் கடந்த இரண்டு வருடங்களாக இயங்கிவருவதாகவும்  பல இந்திய நடிகர்கள் ஷ்ரியா சரண் ,சீமா பிஸ்வாஸ், ஷாபானா அஸ்மி ,சித்தார்த் சூரியநாராயண் ஆகியோர் பங்கு கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்  கிழமை இலங்கையில்  இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் தீடீர் என்று இடை நிறுத்தப்பட்டுள்ளது அதற்கான காரணம் சில நடிகர்கள் தொடர்பானது  படப்பிடிப்பு குழுவின் உள்வட்ட பிரச்சினை என்று தெரிவிக்கபடுகின்றது எனினும் படப்பிடிப்பு நிறுத்தப்படாது சில சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர் இந்த படமாக்கல் ஏப்ரலில் தொடங்கப்படும் என்று இலங்கையில் இந்த படம் தயாரிப்புக்கு பொறுப்பான தி பிலம் டிம் பிரைவட் லிமிட்டட் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது விரிவாக
உலக மனித சமுகத்துக்கு இறுதி தூதுவராக அனுப்பப்பட்ட இறைவனின் இறுதி தூதரையும் இஸ்லாத்தையும் அறிவுக்கு புரம்பான கற்பனைகளை அடிப்படையாக கொண்டு தனது விமர்சனங்கள் என்ற பெயரில் கற்பனை குப்பைகளை உலகிற்கு வழங்கிய சல்மான் ருஸ்தி எழுதிய மற்றுமொரு கதைதான்  நடுநிசி சிறுவர்கள் Midnight’s Children- என்ற கதையை படமாக்க பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
1990 களில் BBC நிறுவனம் இந்த கதையை தான் ஐந்து குறுந்தொடர்களாக படமாக்க முயற்சிகளை மேற்கொண்டது இந்த படமாக்கும் வேலையை இலங்கையில் அனுமதி பெற்று தொடங்கிய நிலையில் இலங்கை முஸ்லிம்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக இலங்கையில் படமாக்க வழங்கப்பட்ட அனுமதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அரசாங்கத்தினால் மீள பெறப்பட்டது இதை தொடர்ந்து BBC நிறுவனம் அந்த படமாக்கல் முயற்சியை கைவிட்டது .
இதை தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டு  பிரிட்டன் நிறுவனமான Royal Shakespeare Company  மேடைகளில் பயன்படுத்தியுள்ளது தற்போது இந்த கதையை சர்வதேச விற்பனை முகவரான FilmNation கம்பெனி  அனுசரணையில் இந்திய பிரபல இயக்குனர் தீபா மேத்தாவும்  சல்மான் ருஸ்தியும் இணைத்து  கடந்த இரண்டு வருடங்களாக படமாக  உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
News: Lankamuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!