February 02, 2011.... AL-IHZAN Local News
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நேற்றிரவு தொடக்கம் இன்று காலைவரை பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதனால் மீண்டும் ஒரு சில இடங்களில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான காலநிலை நீடிக்குமானால் மீண்டும் ஒருசில குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக மாவட்ட அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இங்கினியாகல குளக்கட்டின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், அதன் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த இங்கினியாகல சுற்றுவட்டார மக்கள் பீதியடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் பாடசாலை சிலவற்றுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், அரச காரியாலயங்கள் சிலவும் செயலிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஒரு சிலர் பீதியினால் இடம்பெயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள் :
Post a Comment