animated gif how to

ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்

February 04, 2011 |


February 04, 2011.... AL-IHZAN Local News
இலங்கைவாழ் மக்கள் அனைவரும் 63வது தேசிய சுதந்திர தினத்தை பெருமதிப்புடன் நினைவுகூரும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.  இலங்கைத் தீவின் சுதந்திரத்திற்காகவும் விடுதலைக்காகவும் செய்யப்பட்ட எல்லையற்ற அர்ப்பணங்கள் இன்றைய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை மிகுந்த பெருமைக்குரியதாக ஆக்கியுள்ளது.
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மிகப் பெரும் தியாகங்களைச் செய்து வெற்றி கொண்ட சுதந்திரத்தை அர்த்தமிக்கதாக ஆக்க வேண்டும் என்பதே இன்று முழு தேசத்தினதும் அபிலாஷையாகும் விரிவாக
இனம், கட்சி அல்லது சமயம் என்ற எந்த வேறுபாடுகளுமின்றி மக்களின் கவலையைப் போக்கி மனநிறைவை அதிகரிப்பதற்காகவே சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதாக சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் அமரர் டி. எஸ். சேனாநாயக்க அன்று தேசத்தைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார்.
இதுவே சுதந்திரத்தை எதிர்பார்க்கும் எந்தவொரு தேசத்தினதும் நோக்கமாகும். அந்த நோக்கத்தை அடைந்து கொள்ள வேண்டுமானால் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும். அபிவிருத்தியை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு எட்டும் சுதந்திரத்தை நோக்கி எடுத்து வைக்கப்படும் எட்டுக்களாகும் என்ற வகையில் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக ஆக்குகின்ற பயணம் மென்மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
மிகபெரும் சுதந்திரத்தை நோக்கிய இந்தப் பயணத்தில் கடந்த கால, நிகழ்கால தவறுகளை நாம் சரிசெய்து கொள்ள வேண்டும்.
பிரிவினைகளினூடாக நாம் எந்த வெற்றியையும் பெற்றதில்லை. பிரிவினை எம். எல்லோருடைய சுதந்திரத்தையும் பறித்துவிடக் கூடியதாகும்.
னவே ஐக்கிய இலங்கை தேசமொன்றைக் கட்டியெழுப்புவதே சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் அதனை அர்த்தம் நிறைந்ததாக ஆக்கவும் உள்ள சிறந்த வழியாகும். நாட்டைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நாம் செய்த அர்ப்பணத்தைகப் போன்றே ஐக்கிய தேசமொன்றைக் கட்டியெழுப்பு வதிலும் நாம் ஒன்றுபட்டு அர்ப்பணத்துடன் செயற்பட வேண்டியுள்ளது.
நாம் ஒரு மேன்மைமிக்க வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களாவோம். அந்த வரலாறு சுதந்திரத்திற்காக மிகப்பெரும் அர்ப்பணங்க ளைச் செய்த வீரர்களால் நிரம்பியுள்ளது.
இந்த எல்லா தேசப்பற்றாளர்களுக்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் எனது கெளரவத்தை சமர்ப்பிக்கின்றேன்.- தினகரன்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!