animated gif how to

பாராளுமன்ற உறுப்பினர் நூர் தீன் மசூர் வபாத்: நாளை காலை 7.30 மணியளவில் அடக்கம் செய்யப்படும்.

December 02, 2010 |

December 02, 2010.... AL-IHZAN Local News
இணைப்பு-3

பிரிட்டனிலிருந்து மகன் வந்ததுமே மசூரின் ஜனாஸா நல்லடக்கம்



மாரடைப்பு காரணமாக இன்று வியாழக்கிழமை  காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து வபாத்தான முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நூர்தின் மசூரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 7.30 அளவில் இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
தற்சமயம் கொழும்பில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது ஜனாசா இன்று இரவு 8 மணியளவில் புத்தளத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது ஆதரவாளர்கள் புத்தளத்திற்கு சுமார் 20 பஸ்களில் வருகைத் தந்துள்ளனர்.
மேலும் வபாத்தான வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நூர்தின் மசூரின் புதல்வர் பிரித்தானியாவிலிருந்து வருகைத் தந்துக் கொண்டிருப்பதாகவும், அவர் வந்ததும் நாளை காலை 7.30க்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இணைப்பு-2 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்   நூர் தீன் மசூர் மாரடைப்பு காரணமாக இன்று காலை  வபாத்தகியுள்ளதாக எமக்கு கிடைத்த தொலை போசி தகவல்கள் தெரிவித்தன-இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இவரின் ஜனாஸா இன்று வியாழகிழமை புத்தளம் எருக்கலம்பிட்டி ஜும்மா மஸ்ஜிதில் பி.ப 1 மணியிலிருந்து பி.ப 3 மணிவரை வைக்கப்பட்டு. . இன்று இரவு இஷா தொழுகையின் பின்னர் 9.00 மணியளவில் கொழும்பு ஜாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் அடக்கம் செய்யப்படும்.
நூர்தீன் மசூர் 1962 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி மன்னார் எருக்கலம்பிட்டியில் 6ம் வட்டாரத்தில் பிறந்தார் தனது உயர் கல்வியை கொழும்பு பல்கலைகழகத்தின் வர்த்தக பிரிவில் பெற்றுள்ளார் , புத்தளத்திலும் , வவுனியாவிலும் வாழ்ந்த இவர் தற்காலமாக கொழும்பில் வாழ்த்து வந்துள்ளார்


வர்த்தகத்தைத் தொழிலாகக் கொண்ட இவர் 2000 ஆம் ஆண்டு முதன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். பின்னர் 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் மூலம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு அமைச்சரவை அந்தஸ்தற்ற புனர்வாழ்வு அமைச்சராகவும் பதவி வகித்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!