November 06, 2010.... AL-IHZAN Local News
திருகோணமலையிலிருந்து 750 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடாவின் கிழக்கில் உருவான தாழமுக்கம் நேற்று முதல் சூறாவளியாக மாறி நகரத் தொடங்கி இருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். ஆர். ஜயசேகர தெரிவித்தார்.
இச்சூறாவளி இலங்கையின் வடக்கு வட கிழக்கு கரையை அண்மித்தபடியே கடலில் பயணம் செய்து நாளை 7ம் திகதி தென்னிந்தியாவின் சென்னையை அடையும் எனவும் அவர் கூறினார்.
இச்சூறாவளி குறித்து வடக்கு கிழக்கு மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இச் சூறாவளிக்கு ஜல் என பெயரிடப்பட்டுள்ளது.
RSS Feed
November 06, 2010
|




0 கருத்துரைகள் :
Post a Comment