ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (24/08/2010) கண்டியில் நடைபெற இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் அரசுடன் இணைவது தொடர்பாகவும் பேசவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது கடந்த 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீமுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது இந்த சந்திப்பில் ஒலுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமை அங்கிருந்து அகற்றுவது தொடர்பாக ஜனாதிபதி சாதகமாக கருத்து தெரிவித்திருந்தார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் அரசுடன் இணையவேண்டும் என்ற அழுத்தம் கட்சி மட்டத்திலும் முஸ்லிம் சமூக மட்டத்திலும் அதிகரித்து வருவது குறிபிடத்தக்கது.
0 கருத்துரைகள் :
Post a Comment