animated gif how to

கஷ்மீரில் மக்களை சுட்டுக்கொல்வதை விளையாட்டாக கொண்ட இந்திய அரச பயங்கரவாதம்

August 05, 2010 |



அப்பாவி முஸ்லிம் வாலிபர்களையும், பெண்களையும், சிறுவர்களையும் பயங்கரவாதிகள் எனக்சுட்டுக்கொல்வதையும் இதனைக் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் பொது மக்களை சுட்டு கொல்வதையும் விளையாட்டாக கொண்ட டுள்ளது இந்திய படைகள் ஜூன் 11 க்குப் பிறகு இதுவரை 41 அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொன்றுள்ளது . கடந்த கிழமை இந்திய படை சுட்டதில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான்
அரசியல் வாதி ஒருவரின் வருகையை எதிர்த்தவர்களை இந்திய படைகள் துரத்திச் சென்றபோது முஜாபர் அஹமத் பட் வயது 17 ஓடையில் தள்ளப்பட்டு கொல்லப்பட்டது முதல் வன்முறைக்கு காரணமாக அமைந்தது அதை தொடர்ந்து முஜாபரின் ஜனாசா நிகழ்வில் ஏற்பட்ட அடக்குமுறையில் பயாஸ் அஹ்மத் வானி வயது 30 சுட்டு கொல்லபட்டார்
இந்த ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் அரசையும் பாதுகாப்பு படையையும் எதிர்த்து களம் குதித்தனர் இதில்  இந்திய படை சுட்டதில் பான்சி ஜான்  வயது 25 என்ற இளம் பெண் கொல்லபட்டார் இதையடுத்து கொதித்தெழுந்த கஷ்மீர் மக்கள்  இந்திய படைகளை எதிர்த்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அப்ரார் அஹ்மத்  வயது  14  என்ற சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இதையடுத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஸ்ரீநகரில் பதட்டம் நிலவுகிறது இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.                                                                            
M.இனாஸ்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!