animated gif how to

ஸாராஹ் மாலினி பெரேராவின் அடுத்த வழக்கு விசாரணை இன்னும் ஐந்து மாதங்களின் பின்

July 03, 2010 |


ஸாராஹ் மாலினி பெரேரா நீதிமன்றில் தன் மீது சுமத்த பட்டுள்ள குற்றங்களை மறுப்பதற்காக இரண்டாவது தடவையாகவும் ஆஜரானார் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த வழக்கை வருகின்ற நவம்பர் மாதம் வரை மறு வழக்கு விசாரனைக்காக நீதிபதியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இவரின் சட்டத்தரணி ஸாராஹ் பௌத்த மதத்தை நிந்திக்க முனைய வில்லை என்றும் கிரிமினல் குற்றம் இவர் மீது சுமத்துவதற்கான எந்த அடிப்டையும் இல்லை என்றும் கடந்த முறை நீதிமன்றத்தில் தெரிவித்தார் அனால் நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கில் சட்டத்தரணி தனது வாதத்தை முன்வைக்க நேரம் வழங்கப் படவில்லை இந்த வாழ்கை மீளாய்வு செய்யுமாறு வழக்கு இலங்கை சட்டமா அதிபருக்கு- Attorney General of Sri Lanka அனுப்பிவைக்க பட்டுள்ளது என்பது குறிபிடதக்கது.
இவர் மீது இரண்டு சட்டத்தின் இரு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது ஆந்த இரண்டு சட்ட பிரிவுகளும்  மற்றவர்களின் மதத்தை நிந்திப்பதன் ஊடாக அவர்களை நிந்திப்பது தண்டனைக்குரிய குற்றமாக கூறுகின்றது.  அதன் முதல் சட்ட பிரிவில் குற்ற வாளியாக காணப் பட்டால் கூடியது ஒரு வருடமும் இரண்டாவது சட்ட பிரிவில் குற்றவாளியாக காணப்பட்டால் கூடியது இரண்டு வருடங்களும் இரண்டு பிரிவுகளிலும் அபராதத்துடன் தண்டனையும் வழங்க முடியும் என்று அவரின் சட்டத்தரணி கூறியுள்ளார். இவர் கைது செய்யப்பட்டு பிணையில் ஒரு மாதங்களின் பின்னர் வெளிவந்த போதிலும் வழக்கு நிறைவு பெறும்வரை இலங்கையை விட்டு வெளியேற முடியாது என்பது குறிபிடத்தக்கது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!