animated gif how to

ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் நுழைவு அனுமதி மறுப்பு இனவாத Geert Wilder க்கு முழு அனுமதி

June 20, 2010 |







சர்வதேசரீதியாக  ஜனரஞ்சகமாக மதங்களுகிடையிலான உறவு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் பிரபல்யமான பேச்சாளரான ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி.இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளாராம் .
ஏற்க முடியாத நடத்தை “unacceptable behaviour” என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாம் ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் வழமை போன்று பல உரைகளை நிகழ்த்தவிருந்தார் இந்த நிலையில் இவர் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு மூன்று வருட கால தடை விதித்துள்ளதாக மற்றும் ஒரு செய்தி குறிபிடுகின்றது . அதேவேளை Geert Wilder என்பவர் நெதர்லாண்ட்டில் அல் குர்ஆன் பாசிச புத்தகம் அதை தடை செய்யவேண்டும் விரிவாக பார்க்கமுஸ்லிம்களை நெதர்லாண்ட்டில் இருந்து விரட்ட வேண்டும் ஏன் ஐரோபாவில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று பகிரங்கமாக பிரசாரம் செய்பவர் Geert Wilder இவன் அண்மையில் பிரிட்டிஷ் BNP – British National Party இனவாத கட்சியால் லண்டன் நகருக்கு அழைக்கபட்டு இஸ்லாத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கும் படமான பித்னா என்ற குறும் படத்தை திரையில் அரங்கேற்றி வைத்தார் இவனின் அரசியல் கருத்துகள் நெதர்லாண்ட்டில் மற்றும் ஐரோபிய நாடுகளில் இனவாதத்தை தூண்டி வருகின்றது இந்தநிலையில் பிரிட்டிஷ் BNP இனவாத அரசியல் கட்சி இவரை அழைத்து ‘பித்னா’ என்ற படத்தை முஸ்லிம்களின் எதிர்ப்பையும் புறக்கணித்து திரை ஏற்றியது இந்த இனவாதிக்கு பிரிட்டிஷ் எந்த நுழைவு தடையையும் விதிக்க வில்லை என்பது குறிபிடதக்கது
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரிட்டிஷ் நடுநிலையாளர்கள் மதங்கள் பற்றி ஆய்வுகளை செய்து எந்த மதத்தையும் நிந்திக்காத முறையில் பிரசாரங்களை மேற்கொள்ளும் ஸாகிர் நாயக் போன்றவர்களுக்கு விதிக்க பட்டுள்ள இந்த தடை பக்க சார்பானது அறிவு பூர்வமாக அவரை எதிர்கொள்ள முடியாதவர்களின் முடிவுதான் இந்த நுழைவுத் தடை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!