animated gif how to

படைகளை வாபஸ் பெறும்படி ஒபாமாவிடம் அல்கொய்தா வலியுறுத்தல் _

June 22, 2010 |



முஸ்லிம் நாடுகளில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் அல்கொய்தா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளாது. 

அமெரிக்காவுக்கான அல்கொய்தா  அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஆதம் கதான் உரை நிகழ்த்திய வீடியோ கேசட் நேற்று (ஜுன்.20) வெளியிடப்பட்டது. இதில் கதான் 24 நிமிட நேரம் பேசியுள்ளார். இதில் அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளார். 

அவற்றில் முஸ்லிம் நாடுகளில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்பது தான் முக்கியமானதாகும். படைகள் மட்டுமின்றி, அங்குள்ள உளவுத் துறையினர் பாதுகாப்பு ஆலோசகர்கள், அதிகாரிகள், போர் கப்பல்கள் மற்றும், போர் விமானங்கள் அனைத்தையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும். 

என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. அந்த வீடியோவில் அல்கொய்தா செய்தி தொடர்பாளர் ஆதம் காதான் வீடீயோவில் குறிப்பிட்டுள்ளார். 

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!