animated gif how to

நளீமியாவின் கிலாபத்தை நினைவு படுத்தும் துருக்கிய காட்சியறை

June 14, 2010 |

அல் குர்ஆனின் விஞ்ஞான  அற்புதங்களும் ,மனித நாகரிகத்துக்கு முஸ்லிம்களின் விஞ்ஞான பங்களிப்பும் என்ற தலைப்பில் பேருவலை ஜாமியா நளீமியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தின் ஜூன் மாதம் 12 தொடக்கம் , 15 ஆம் திகதி வரை என்ற கால அட்டவணையில் கண்காட்சி நடைபெற்று வருகின்றது இங்கு 3 பிரிவுகளாக காட்சி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன இதில் விசேட காட்சியறைகள் ஒன்றில் துருக்கிய காட்சியறை அமைக்க பட்டுள்ளது இங்கு இஸ்லாமிய கிலாபத் காலபகுதியில் உருவாக்கப்பட்ட , பயன்படுத்தபட்ட பல்வேறுபட்ட பொருட்களின் சில மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளது இந்த காட்சி அறை கிலாபத் சிந்தனையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று எமது செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார் 3.3.1924 ஆம் ஆண்டு துருகியில் இஸ்லாமிய கிலாபத் அழிக்க படும்வரையிலான காலபகுதில் 13 நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு இறுதியாக துருக்கியில் அழிவுகளில் இருந்து பாதுகாக்கபட்ட சில பொருட்களின் சில மாதிரிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது இஸ்லாமிய கிலாபத்தை இறுதியில் ஐரோப்பியர் துருக்கியில் வைத்து வீழ்த்தினர் கிலாபத் வீழ்த்தப்பட்டு 86 வருடங்கள் கடந்துள்ளது உலகம் முழுவதிலும் முஸ்லிம் உம்மாஹ் அதன் வழியை சுமந்து கொண்டிருகின்றது என்பது குறிபிடதக்கது.
அல் குர்ஆனின் விஞ்ஞான அற்புதங்கள் என்ற பிரிவில் புவியியல், மனிதக் கட்டமைப்பு, வானவியல், விலங்கியல் தாவரவியல், சமுத்திரங்கள் போன்ற துறைகளில் அல் குர்ஆன் முன்வைக்கும் விஞ்ஞான உண்மைகள் காட்சிகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் அறிவியல் துறை பங்களிப்பு என்ற பிரிவில் இயற்கை விஞ்ஞானம் , சமூக விஞ்ஞானம், அரபு எழுத்துகளை , மற்றும் மூன்றாவது பிரிவில் விசேட காட்சியறைகள் ஒன்றில் துருக்கிய காட்சியறை இரண்டில் ஈரானிய காட்சியறை என்று மிகவும் சிறப்பாக அமைக்க பட்டுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!