animated gif how to

இஸ்ரேலிய தாக்குதலில் பேருவளையை சேர்ந்த அஹமத் நலீப் படுகாயம்

June 07, 2010 |

இங்கு தரப்படும் படங்களில்  அஹமத் லுக்மான் மற்றும் அவரின் சகோதரி மர்யம் இடது மற்றும் மனைவி ஜெரி ஷபல் ஆகியோர் ஸ்தான்புல் வைத்தியசாலையில் காணப்படுகின்றனர்.




இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் நிவாரண உதவி கப்பல்கள் மீது நடத்திய தாக்குதலில் இலங்கையை சேர்ந்த சில முஸ்லிம்கள் கப்பல்களில் இருந்துள்ளனர் அவர்கள் இருவர் ஒரு குடும்பத்தை சேர்ந்த 21 வயது நிரம்பிய அஹமத் லுக்மான் மற்றும் இவரின் சகோதரி தஸ்லீம் மரியம் இருவரும் சகோதரர்கள் இவர்கள் டாக்டர் லுக்மான் தாலிப் என்பவரின் பிள்ளைகள் என்று அறிய முடிகின்றது என்று தெரிவிக்க படுகின்றது இதில் அஹமத் லுக்மான் காலில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் துளைத்த கடும் காயங்களுடன் தற்போது துருக்கியின் ஸ்தான்புல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார் இவர்கள் கள்- எளியவை சொந்த இடமாக கொண்டவர்கள் என்று அறிய முடிகின்றது இவர்கள் உறவினர்கள் கொழும்பு மற்றும் பேருவளை பிரதேசங்களில் வசிக்கின்றார்கள் இந்த தகவல் பற்றி எமது பேருவளை செய்தியாளர் தெரிவிக்கையில் அவர்கள் தற்போது துருக்கியில் இருப்தாகவும் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்றும் ஆனால் கப்பலில் தாக்குதலின் பின்னர் 12 மணித்தியாலங்கள் அஹமத் லுக்மாநுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டு இருந்ததாகவும் அஹமத் தின் குடும்பத்தவர்கள் தெரிவித்ததாக எமக்கு தெரிவித்தார் அஹமத் லுக்மான்- நலீப் -என்பவர் ஆஸ்திரேலியாவில் சட்டத்துறை மாணவர் என்பதும் மரியம் என்பவர் குவைத் நாட்டில் மருத்துவ மாணவி என்றும் தெரிய வருகின்றது.
அஹமத் லுக்மான் சகோதரி மர்யம் மனைவி ஜெரி ஷபல் ஆகிய மூவரும் நிவாரண உதவி கப்பலில் சென்றுள்ளனர் அஹமத் லுக்மானின் மனைவி ஆஸ்திரேலியா பெண் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் இவர் தற்போது மூன்று மாத கற்பிணி இவரும் கப்பலில் சென்றார் இதில் சகோதரி மர்யம் மனைவி ஆகியோரும் சிறு காயம் அடைந்துள்ளனர்.
அஹமத் லுக்மான், சகோதரி மர்யம், ஜெரி ஷபல் உட்பட கப்பலில் சென்ற அனைவருக்கும் பாராட்டுகள்.


நன்றி: lankamuslim

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!