animated gif how to

இலங்கை இஸ்லாமிய அழைப்பு பணியின் ஒரு புதிய அத்தியாயம்

May 24, 2010 |




இஸ்லாமிய அழைப்பு பணியை சர்வதேசரீதியாக  ஜனரஞ்சகமாக மேற்கொண்டு வரும் அனைவராலும் அறியப்பட்ட டாக்டர் ஸாகிர் நாயக் இலங்கையில்   நேற்று  23-05-2010 ஞாயிறு- கொழும்பு சுகததாச வெளியரங்கில் நேற்று  மாலை 7.00 தொடக்கம் இரவு 11.00 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்ட   நிகழ்ச்சியில் “Peace through religion” மதத்தின் ஊடாக  சமாதானம் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்   இந்த நிகழ்சிக்கு இலங்கை பூராவும் இருந்து 45,000 கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிகழ்வில் இருவர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை முறையாக ஏற்று கொண்டுள்ளனர்  என்பதுடன் அதிகமான முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கலந்து கொண்டு தமது வினாவுக்கு  விளக்கங்களை பெற்றுகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஒரு கிருஸ்தவ சகோதரர் “இவ்வளவு காலமும்  கிருஸ்தவ ஆலையங்கள்  கற்றுத்தராத பைபிளை சில நிமிடங்களில் நீங்கள் எனக்கு கற்று தந்தீர்கள்” என்று குறிபிட்டார்  என்பதுடன் விளக்கங்களின் பின்னர்   இஸ்லாத்தை ஏற்றுகொண்டார்  இன்னும்  பலர் தமது சந்தேகங்களுக்கு தெளிவை பெற்றுகொண்டனர். 
இந்த நிகழ்வு இலங்கை இஸ்லாமிய அழைப்பு பணியில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக, இலங்கை இஸ்லாமிய அழைப்பு பணியின்  வரலாற்றில் ஒரு மின்னும் நட்சத்திரமாக    பார்க்க படுகின்றது  இதனை இலங்கையில்  செய்யப்பட்ட முதல்   பகிரங்க இஸ்லாமிய அழைப்பு பணி என்று  குறிபிட முடியும்  இதற்கான ஏற்பாடுகளை  ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனம் மேற்கொண்டது எனிலும் பொதுவாக இலங்கையில் இருக்கும் அணைத்து இஸ்லாமிய நிறுவங்களின் உறுப்பினர்களும்   இந்த நிகழ்ச்சியை வெற்றி கரமாக கொண்டு நடாத்த தேவையான ஒழுங்குகளில் ஈடுபட்டிருந்தமை சிறப்பம்சமாகும் ஆக பல இஸ்லாமிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இலங்கையின் இஸ்லாமிய அழைப்பு பணியில் புதிய தடம் பதித்துள்ளார்கள் என்று குறிபிடலாம்   இன்ஷா அல்லாஹ்- இலங்கையின் இஸ்லாமிய அழைப்பு பணி தொடர பிராத்திப்போம்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!