animated gif how to

முறாசிலிடமிருந்து…ஸர்மிளாவுக்கு ஒரு திறந்த மடல்!

November 23, 2012 |

அன்பின் சகோதரி,முதலில் அல்லாஹ்தஆலா உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் ஹிதாயத்தை நஸிபாக்கவேண்டுமென உளப்பூர்வமாக பிரார்த்தித்தவனாக இந்த மடலை வரைகின்றேன்நீங்கள் BBC செய்திச் சேவைக்கு கூறிய கருத்தும், அதனைத் தொடர்ந்து நீங்கள் கூறிய கருத்துக்கு கொடுத்த விளக்கமும் (ஈமானிய இதயங்கள்) எல்லோருக்கும் போல எனக்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடும் வேலைப்பளுவுக்கு மத்தியில் சற்று தாமதமாக இக்கடிதத்தை எழுதுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.
சகோதரி,
ஒரு ஊடகவியலாளராக ஒரு சமூக செயற்பாட்டாளராக இருந்து கொண்டு நீங்கள் கூறிய கருத்தினால் இன்று உங்களது பெயர் இழிசெயலான விபசாரத்தோடு இணைத்துக் கூறப்படுவதை -கண்டிக்கப்படுவதை பார்க்கின்ற போது ஒரு புறம்; கவலையாக இருக்கின்றது.
மறுபுறம், நீங்களே கூறிய கருத்திற்கு நீங்களே கொடுத்;;;;த விளக்கத்தில் நான் இஸ்லாமியப் பெண்ணாக இருக்கின்ற காரணத்திற்காக சமூக உண்மையை மறைக்க முடியாது …”என்று கூறி முன்பு கூறிய கருத்துக்களையே மீண்டும் வலியுறுத்தியுள்ளீர்கள்.
குளிகச் சென்ற நீங்கள் சேற்றைத்தான் பூசியுள்ளீர்கள். ஔரத்திற்குள் இருப்பதாகக் கூறி நிர்வாணமாகவே நிற்கின்றீர்கள்! இதனால் உங்கள் மீது பரிதாபமே ஏற்படுகிறது.!!
முன்பு வாய்க்கு வந்தவாறு பிதற்றியது சம்பந்தமாக பின்பு விளக்கத்தைக் கொடுக்க முனைந்த நீங்கள் சற்று ஆற அமர இருந்து சிந்தித்து, ஒரு வசனத்தில் கூட முழுமையான பதிலை வழங்கியிருக்கலாம்.
ஆனால், அவ்வாறு உங்களால் ஒரு பதிலை அல்லது விளக்கத்தை கொடுக்க முடியாமல் போனதனால் உங்களது தலைக்குள் சரக்குஇருப்பதாக எனக்குத் தெரியவில்லை!
நான் இவ்வாறு கூறும் போது இல்லைஎன் தலைக்குள் சரக்குநிறையவே இருக்கின்றது என்று நீங்கள் திருப்பிக் கூறினால், இம்மடலை எழுதும் என் தலைக்குள் சரக்குஎதுவுமே இல்லை என்பதுதான் அர்த்தம்!
அப்போது நான்; மேலே எழுதிய வரியில் கட்டாயம் ஒரு திருத்தத்தைச் செய்துதான் ஆக வேண்டும். அதுதான் உங்கள் தலைக்குள் சரக்குஇருக்கின்றது. அது சொந்தச் சரக்கல்ல. வெளிநாட்டுச் சரக்குஎன்று!
எனக்கு நன்றாகவே தெரியும் இந்தியாவின் ஸல்மான் ருஸ்தியும் பங்காளதேஷ் தஸ்லிமா நஸ்ரினும் நீங்கள் கூறிய கருத்துக்களை ஒத்த கருத்துக்களைத்தான் அவர்கள் எழுத்தில் வடித்தார்கள்.அவர்களது தலைக்குள் இருந்தது சொந்தச் சரக்கல்ல. அதுதான் எஹுதி நஸராக்களின் சரக்கு’!
சகோதரி,
விபசாரம் என்பது ஒரு பொல்லாத கொடுமை ; பெரும்பாவம்;;;;;;;;;; தண்டனைக்குரிய குற்றம்!அதற்கும் மேலாக மனிதகுலத்தையே சீரழிக்கும் ஒரு நாசகார நஞ்சு! இதனாலேதான் அதனை செய்யாதீர்கள்என்பதற்கு ஒரு படி மேலே சென்று அதனை நெருங்காதீர்கள்’; என்று சன்மார்க்கம் குறித்துரைக்கின்றது!

இத்தகைய நாறிப்போன ஒரு நாசச் செயலுக்கு- பகுத்தறிவிற்கே பங்கமேற்படுத்தும் ஒரு ஈனச் செயலுக்கு ஒரு தொழில் அந்தஸ்தைக் கொடுத்து, ஏனைய ஆகுமான தொழிலுக்கு இருக்கு வேண்டிய பாதுகாப்பை சுதந்திரத்தை உரிமையைப் பெற்றுக் கொடுக்க நீங்கள் முனைந்திருப்பதன்(உங்கள் கருத்தின் மூலம்) மூலம் நான் முன்பு கூறியது போல் ஒன்றில் உங்கள் தலைக்குள் சரக்குஇல்லை! அன்றில் தலைக்குள் இருப்பது வெளிநாட்டுச் சரக்கு’!!
சகோதாரி,
நீங்கள் கூறிய விளக்கத்தில் கொடுத்துள்ள வாக்கியத்தில் நான் மேலே சுட்டிக்காட்டிய நான் ஒரு இஸ்லாமியப் பெண்ணாக இருக்கின்ற காரணத்தினால் சமூக உண்மையை மறைக்க முடியாது …” என்னும் வாக்கியத்தினால் ஒரு சத்தியப் பேச்சாளராக உங்களை அடையாளப்படுத்தும் நீங்கள், சார்ந்திருக்கும் சமூகத்தில் விபசாரம் கோலோச்சுகிறது என்னும் உண்மையையா கூற வருகின்றீர்கள்? அதனை மறைக்க முடியாதென்றா வாதிடுகின்றீர்கள்? மேலத்தேயவாதிகளின் வஞ்சகம் விஞ்சிய வார்த்தைகளை எப்படி இஸ்லாமிய பெண் என்று கூறும் உங்களால் நாகூசாது கூறமுடிகிறது?!

நீங்கள் கூறிய கருத்தை ஆதரித்து உங்களை வரவேற்பதற்கு மாலையுடன் காத்திருக்கும் சில முஸ்லிம் விரோத ஊடகங்கள் நல்லசெய்தியை வெளியிட்டிருப்பதை நீங்கள் பார்த்தீர்களோ என்னவோ தெரியாது.
அவ்வூடகங்களின் கருத்தை வைத்துப் பார்த்தால் உங்களுக்கு இஸ்லாத்திற்கெதிராக துணிந்து கருத்து தெரிவித்ததற்காக நீங்கள் விரும்பாதுவிட்டாலும் உங்களுக்கு ஒரு விருதொன்றைப் பெற்று கொடுப்பதற்கோ, அல்லது அத்தகைய கருத்தை வளர்ப்பதற்கு வளமான நாடொன்றில் வசிப்பதற்கான வாப்ப்பொன்றை வழங்குவதற்கோ முனைவார்கள் போல் தெரிகிறது .
இதேவேளை இக்கருத்தோடு உங்களது ஔரத்இல்லாத ஆடை அலங்காரத்தையும் பேணுதலில்லாத அஜ்னபி’ – ‘மஹ்ரமிதொடர்பாடலையும் தொடர்பு படுத்திப் பார்க்கின்ற போது விபரீதமொன்று மறைந்திருப்பதை உணர்ந்து கொள்ளவும் முடிகிறது.
சகோதரி,
இந்த முஸ்லிம் விரோத ஊடகங்களின் கருத்துக்கு இசைந்து போகவோ, எதிரிகளினால் வெட்டப்பட்டுள்ள சூட்சுமமான குழியில் வீழ்த்தப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கவோ, அல்லது விரோதிகளுக்கு உங்களால் ஒரு வரவுவருவதை அனுமதிக்கவோ என்னால் ஒரு போதும் முடியாது!

சரி , அண்மையில் நீங்கள் கொழும்பில் அறிமுகவிழா செய்த சிறகு முளைத்த பெண்சம்பந்தமாக பேச வேண்டிய தேவையும் உள்ளது. அது சம்பந்தமாக வேறுவோர் வேளையில் கொஞ்சம் விரிவாக உங்களோடு பேசுவது பொருத்தமென நினைக்கின்றேன்.
சகோதரி,
எது எவ்வாறிருந்த போதும் உங்கள் கருத்தின் மூலம் நீங்கள் இஸ்லாமிய ஷரிஆவை மீறி விட்டீர்கள். அதனால் முதலில் அல்லாஹ்விடம் உரிய முறையில் தௌபாசெய்து பாவமீட்சி பெறுங்கள். அத்தோடு, உங்களது நாசக் கருத்துக்கள் சென்றடைந்த அத்தனை ஊடகங்களிலும் தெளிவாக- முழுமையாக உங்கள் மன்னிப்பு விண்ணப்பததை வெளிவரச் செய்யுங்கள்.

அத்தோடு (ஔரத்,தொடர்பாடல் உள்ளிட்ட அனைத்திலும்) இஸ்லாத்தில் பூரணமாக நுழைந்து விடுங்கள்! ( அல்லாஹ் போதுமானவன்…)
சகோதரி,
மனிதர்கள் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டிருப்பதும் அதிலும் ஆண்களை விடவும் பெண்கள் பலவீனமாகப் படைக்கப்பட்டிருப்பதும் உங்களுக்கும் விதிவலக்கல்ல என்பதனாலும் ஒருவர் செய்த தீங்கை விட்டு விட்டு செய்த நலனைப் எடுத்து நல்லெண்ணம் வைக்கலாம் என்பதனாலும் உங்களது நலனுக்கு மீண்டும் மீண்டும் இறைவனை இறைஞ்சி முடிகின்றேன் சகோதரி.

(இத்திறந்த மடலில் ஏதம் பிழைகள் இருந்தால் மன்னிக்குமாறு மனம் திறந்து கோருகின்றேன்)
இப்படிக்கு,
மூதூர் முறாசில்

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!