- இர்ஷாத் றஹ்மத்துல்லா -
மன்னார்
மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி மரைக்கார்
தீவு பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற கிராமத்தில்
அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டில்கள் மற்றும் பொதுக் கட்டிடம் என்பனவற்றின்
மீது நேற்று இரவு தீவைப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதன் போது 7 தற்காலிக கொட்டில்களும் ஒரு
பொது நோக்கு மண்டபமும் தீயில் எரிந்து சாம்பளாகியுள்ளது.
நேற்று இரவு 9.00 மணியளவில்
இ்க்கிராமத்துக்குள் புகுந்த ஆயுதம் தறித்த கும்பல் சம்பவத்தை செய்ததாக அம்மக்கள்
தெரிவித்தனர். இரவு வேளையில் வந்த ஆயுத தாரிகள் பல கொட்டில்களை அகற்றி வாகனத்தில்
ஏற்றிதாகவும் பி்ன்னர் குடிசைகள் சிலவற்றிக்கு தீ வைத்துமுள்ளனர்.
தீ
வைப்பு சம்பவம் இடம் பெற்ற போது ஆயுததாரிகளிடம் அதனை செய்ய வேண்டாம் என்றும், தாங்கள் குடிப்பதற்கு
வைக்கப்பட்டுள்ள தண்ணீரையாவது எடுத்துக் கொள்வதற்கான அனுமதியினை தாருங்கள் என்று
மன்றாட்டமாக கேட்ட போது ஆயுததாரிகள் அனுமதியளிக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.
அதே
வேளை தீ வைப்பு சம்பவம் இடம் பெற்றதனையடுத்து அப்பிரதேச மக்கள் இரவினை கழிப்பதற்கு
கூட நாதியற்ற நிலையில் இருந்ததாக வயோதிபர் ஒருவர் தெரிவித்தார். தற்போது இக்கிராமத்துக்கு
பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிலாவத்துறை காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்வியுற்றதும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்ற
உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் உடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை
எடுத்துவருவதாக தெரியவருகின்றது.
அதே
வேளை இ்ந்த சம்பவம் குறித்து முல்லிக்குளம் கடற்படைத்தள பிரதம அதிகாரியுடன்
பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் நீண்ட நேரம் பேசியுள்ளதாக பிந்திக் கிடைத்த
செய்திகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துரைகள் :
Post a Comment