-மூதூர்
முறாசில்-
ஏனைய
இரு மாகாணங்களோடு கிழக்கு மாகாணத்திலும் தேர்தல் ஒருவாறு நடந்து முடிந்து விட்டது.
தேர்தல் முடிந்த போதும் தேர்தலுக்காக இடம்பெற்ற பிரசார யுத்தத்தின் சத்தங்கள்
இன்னும் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்தவகையில்,‘எந்தப் பள்ளிவாசலும் இந்த அரசாங்கத்தில்; உடைக்கப்படவில்லை’ என்னும் வாசகம் தொட்டு ‘மனிதர்ளை வணங்க முடியுமெனில் பௌத்த
பிக்குகளை வணங்குவேன்’ என்னும் வாசகம் வரை பொறுப்பு
வாய்தவர்கள் பொறுப்புடனோ என்னவோ கூறிய கருத்துக்கள் இலகுவில் மறக்க
முடியாதவைகளாகும்.
இத்தகைய
மறக்க முடியாத கருத்துக்கள் ஒருபுறமிருக்க, இத்தேர்தல்
நடத்தப்பட்ட விதமும் வாக்காளர்களின் பங்கு பற்றுதலும் மேலும் மறக்கவே முடியாத பல
விடயங்களைத் தாங்கி நிற்கின்றன.
தமிழ்
பேசாத அதிகாரிகள்:
அரசாங்கம்
அரச மொழி அமுலாக்கம் பற்றி இக்காலத்தில் அதிக கவனம் எடுத்து வருகின்றது. இது
பெரும்பான்மை இனத்தைவிட சிறுபான்மை இனத்தினருக்கு ஒரு இனிப்பான செய்தியேயாகும்.
என்ற போதும் கிழக்கு மாகாண தேர்தலில் வாக்களிப்பதற்குச் சென்ற தமிழ் மொழிபேசும்
மக்களுக்கு ஒரு கசப்பான அனுபவமே ஏற்பட்டிருந்தது.
கிழக்கு
மாகாணத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றவென நியமிக்கப்பட்ட
பெரும்பாலான சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களும் கனிஷ்ட தலைமைதாங்கும்
உத்தியோகத்தர்களும் தமிழ் மொழி பேசத் தெரியாத சிங்களவர்களிலிருந்து
நியமிக்கப்பட்டிருந்தது மக்களின் வாக்களிக்கும் உரிமைக்கு பெரும் இடையூறாகவே
அமைந்திருந்தது.
(இதற்கு முன்பு இத்தகையதோர் நிலைமை
ஒருபோதும் இருந்ததில்லை.) பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இவ் உத்தியோகத்தர்கள்
சிங்களம் பேசத்தெரியாத வாக்காளர்களோடு கடுமையாக நடந்து கொண்டதாக பரவலாக
வாக்காளர்கள் கவலை தெரிவித்தனர்.
தமது
விருப்புக்குரிய கட்சியின் இலச்சினையையும் வேட்பாளர்களின் இலக்கத்தினையும் சரியாக
அடையாளப்படுத்த முடியாத வயோதிபர்கள் மற்றும் பலவீனமானவர்கள் முதலானவர்களுக்கு
அவர்களது விருப்பை அடையாளப்படுத்துவதற்கு உதவுவதில் ஈடுபட்ட தமிழ் மொழி தெரியாத
கனிஷ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்கள் வாக்காளர்கள் கூறிய கட்சி ஒன்றிருக்க வேறு
கட்சியையே அடையாளப்படுத்திக் கொடுத்துள்ளதாக வாக்களிக்கச் சென்ற பலர்
கூறினர்.அப்போது சென்றவர்கள்; ‘இது
பிழையான வேலை’ எனது வாக்கு ‘இந்த’ சின்னத்திற்குத்தான் வழங்கப்படவேண்டும் என்று தமிழ் மொழியில் எடுத்து
கூறிய போதெல்லாம் அதற்கவா;கள் ‘ஹரி ’ ‘ஹரி ..’ என்று கூறி வாக்காளர்களை அவசரமாக வெளியேற்றியுள்ளனராம்.
இதுபோல
வாக்களிப்பதற்கான சட்டபூர்வ ஆவணங்களுடன் சென்ற பலருக்கு வாக்களிப்பதற்கு அனுமதி
மறுக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பலர் கூறினர். இந்த வகையில்
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குறிப்பாக இளம் குடும்பப் பெண்களாகும்.
இவர்கள் பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தில் பெற்ற தேசிய அடையாள அட்டையுடனேயே
அனேகமாக இற்றைவரை இருக்கின்றனர். இவர்களின் அடையாள அட்டையில் தந்தையின் பெயரோடு
அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அதேநேரம் அவர்கள் திருமணமானதன் பின்
கணவரின் பெயரில் வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டு அதே கணவரின்
பெயரோடு வாக்காளர் அட்டையிலும் பெயர் இடம் பெற்றுள்ளது.
இங்கு
இரண்டு அட்டைகளிலும் பெயர் ஒரே விதமாக இடம்பெறாதது சிறு தவறாக அமைந்தபோதும் உரிய
வாக்காளர் அட்டையில் இடம்பெற்றிருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை ஓத்துப்
பார்ப்பதன் மூலமும் அதேபோல தேசிய அடையாள அட்டையில் இருக்கும் புகைப்படத்தோடு
உரியவரின் தோற்றத்தை சரிபார்ப்பதன் மூலமும் இரண்டு அட்டையிலும் இருக்கம்
பெயருக்குரியவர் ஒருவரே என்பதை இலகுவில் உறுதிப்படுத்த முடியும். என்ற போதும்
அடையாள அட்டை, உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டை ,தேருநர் இடாப்பு என்பன ஒன்றோடொன்று
முரண்பட்டால் உரிய வாக்காளருக்கு வாக்குச்சீட்டொன்றை வழங்குவதற்கு அல்லது வழங்காது
விடுவதற்கு தீர்மானமொன்றை எடுப்பதற்குசிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிக்கு அதிகார
முண்டு.
இத்தகைய
நிலைமையில் தமிழ் மொழி தெரியாதவர்கள் சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரியாக
நியமிக்கப்பட்டிருந்தது வாக்காளர்களுக்கு செய்த அநீதமான செயலாகவே தெரிகிறது .
ஆனால், சிரேஷ்ட தலைமைதாங்கும் அதிகாரிகளும்
கனிஷ்ட தலைமைதாங்கும் அதிகாரிகளும் பெரும்பாலும் தமிழ்மொழி பேசத் தெரியாதவர்களாக
இருந்த போதும் அவர்கள் இவ்விடயத்தில் கடுமையாக நடந்து கொண்ட போதும் எழுது
வினைஞர்களாக பணிபுரிந்தவர்கள் பெரும்பாலும் சிறுபான்மையினராக இருந்ததினால் அவர்கள்
வழமை போல் தந்தையின் கணவரின் பெயரில் அமைந்திருந்த அட்டைகளை இலகுவில் அடையாளம்
கண்டு அவர்களுக்கு வாக்களிப்பதற்கு உதவிபுரிந்துள்ளனர்.
எழுது
வினைஞர்களின் இப்புரிந்துணர்வுமிக்க இச்செயற்பாடு இடம்பெற்றிருக்காது விடில் ‘அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அட்டை
ஆகியவற்றில் வாக்காளர்களின் பெயர் ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளதாகக் கூறி
பெருந்தொகையானோர் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்படாத இக்கட்டான நிலைமையொன்று
ஏற்பட்டிருக்கும். (இத்தகைய பிரச்சினை எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பதற்கு இங்கு
பொது மக்கள் ஓரு விடயத்தை கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். தேசிய அடையாள அட்டை
என்பது ஒருவரது பெயர், வயது, தொழில், முகவரி என்பவற்றோடு அவரை பதிவு செய்த
இலக்கத்தையும் புகைப்படத்தையும் உள்ளடக்கிய முதன்மையான சட்ட பூர்வமான ஆவணமாகும்.
இதில் ஓருவரின் பெயர், தான் வசிக்கம் முகவரி , தொழில் அல்லது தோற்றத்தில் மாற்றம்
ஏற்பட்டதும் அம்மாற்றம் நிகழ்ந்து சில நாட்களுக்குள்ளேயே புதிய அடையாள அட்டையொன்றை
பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பது அவரது கடமையாகும். ஆனால் நடைமுறையில் எவரும்
இச்சட்டபூர்வ ஆவணத்தை சரி செய்து கொள்வதில் கவனம் செலுத்துவதில்லை.எனவே,இவ்விடயம் சம்பந்தமாக சமூக
ஆர்வலர்களும் சமூக சங்கங்களும் விழிப்புணர்வொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பது
நல்லது.
வெற்றி
ஏணியிலிருந்து வீழ்த்தப்பட்டவர்கள்:
தேர்தலில்
வாக்காளர்களில் பெரும்பாலானோர் தத்தமது விருப்புக்குரிய கட்சிக்கும்
வேட்பாளர்களுக்கும் பொறுப்புணர்வோடு வாக்களித்தபோதும் அவ்வாக்குகள் உண்மையாகவே
உரியவர்களை சென்றடைந்ததா என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம். சிலர் வெற்றி ஏணியின்
உச்சத்தை தொட்ட போதும் சூட்சுமமான திட்டங்கள் ஊடாக வெற்றி ஏணியிலிருந்து
வீழ்த்தப்பட்டு வேறு ஓருவரை வெற்றியின் உச்சத்திற்கு உயர்த்திய கேவலமான நிலைமையும்
தேர்தலில் இடம்பெற்றுள்ளது.
ஓரு
கட்சி வேரொரு கட்சியின் வாக்குச்சீட்டுக்களையோ ஒரு வேட்பாளர் வேரொரு வேட்பாளரின்
விருப்பு வாக்குகளையோ அபகரித்து ‘வெற்றி’ முத்திரை குத்திக் கொள்வதென்பது பாவம்
பரிதாபத்திற்குரிய விடயமே. ஏனெனில், அத்தகையவர்கள்
தாம் செய்த ‘திருவினைகள்’ வேறு எவருக்கும் தொரியாது தானே என்று ‘கிணற்றுத்தவளை’ அறிவுடன் கௌரவத்தை தன்பெயருக்கு
முன்னாள் பொறித்தாலும் சமூகம் அத்தகையவரை ‘திருடன்’ என்னும் அடைமொழியுடன் அவரது மரணம் வரை
நோக்குவதும் மரணித்தபின்பும் அத்தகைய கேவலத்தை அவரது பரம்பரையுடன் தொடர்பு படுத்தி
அடையாளப்படுத்துவதும்தான் பரிதாபகரமானதாகும்.
அதற்கெல்லாம்
மேலாக மரணத்தின் பின்பு நிரந்தரவாழ்வை அடையப் போகின்ற நிலையில் வாய்க்கு
முத்திரையிட்டு கரங்கள் உள்ளிட்ட உறுப்புக்களின் சாட்சியத்தை நெறிப்படுத்தி
தீர்ப்பு வழங்கும் ‘அந்த நாளில்’ அத்தகையவர்களின் நிலைமை என்னவாகும்
என்பதை கொஞ்சம் எண்ணிப்பார்ப்பார்களா?
அபிலாசைகள்
நிறைவேறுமா?
கிழக்கு
மாகாண சபை தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் எவரெவர் எந்தெந்த செய்தியை கூறி வாக்குக்
கேட்டாரோ- தொரிவானாரோ அவரவருக்கு அந்தந்த செய்தியை அல்லது வாக்குறுதியை காப்பாற்ற
வேண்டிய தலையாய பொறுப்புள்ளது. மக்களால் எதற்காக ஆணை வழங்கப்பட்டதோ அதனை அவர்கள்
சரிவரச் செய்ய வேண்டும். அது ஒரு ‘அமானிதம்.’
இன்று
முஸ்லிம் சமூகத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் சிங்கள இணையத்
தளங்களும் பத்திரிகைகளும் பாரிய பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. இதன்
பின்புலத்தில் முஸ்லிம்களது எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும் பொருளாதாரத்தை முடக்கவும்
காணிகளை அபகரிக்கவும் உயர் தொழில் வாய்ப்புக்களிலிருந்து ஒதுக்கவும் கல்வி,கலாசார சமய நிலைமைகளை சீரழிக்கவும்
வெளிபடையாகவே திட்டமிட்ட செயற்பாடுகள் அரங்கேறுகின்றன.
இத்தகைய
செயற்பாடுகளுக்கு எதிராகவும் குறைந்தது இச்செயற்பாடுகளை ஊக்குவிக்கும்
ஊடகங்களையாவது கட்டுப்படுத்தாது, வேடிக்கை
பார்க்கும் அரசாங்கத்திற்கெதிராகவுமே பெரும்பாலான முஸ்லிம்கள் வாக்களித்துள்ளனர்.
இவ்வாக்களிப்பின் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்
என்னும் செய்தியையே அரசாங்கத்திற்குத் தொரிவித்துள்ளனர். மறுபக்கம் அரசாங்கத்திற்கு
ஆதரவாக வாக்களித்துள்ள முஸ்லிம்களும் முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் அபிலாசைகள்
சம்பந்தமான ஆணையையே அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.
எகவே, இம்மாகாண சபையில் தொரிவு
செய்யப்பட்டுள்ள 15 முஸ்லிம் உறுப்பினர்களில் 14 பேர்கள் ஓரணியில் இருப்பதற்கான நிலைமை
உருவாகியுள்ளதனால் அவர்கள் தமது உள்ளக முரண்பாடுகளுக்கப்பால் நின்று முஸ்லிம்
சமூகம் எதிர்நோக்கிவரும் சவால்களை நாடிபிடித்தறிந்து செயற்படுவதற்கான வாய்ப்பு
இருக்கின்றது. இத்தகைய வாப்பை சரியாகப்பயன்படுத்தத் தவறினால் எதிர்காலத்தில்
முஸ்லிம் சமூகம் பற்பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய அபாயகரமான நிலைமை
தோன்றலாம்.
இங்கு
முஸ்லிம்களின் தனிப் பெரும்கட்சியும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் இம்மாகாணத்தில்
முஸ்லிம்களது இருப்புக்கு வேட்டு வைக்கும் காணி அபகரிப்பு, இன, மத
தனித்துவத்திற்கெதிரான திணிப்பு முதலான விடயங்களில் கூடிய கரிசனை எடுத்தல்
வேண்டும். அக்கரிசனை ஏனைய மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களது நிலைமைகளையும்
உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
எனவே,முஸ்லிம்களது தனிப் பெரும் கட்சியும்
ஏனைய முஸ்லிம் கட்சிகளும் கடந்த காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்களை மீள்வாசிப்பு
செய்து, மனசாட்சிக்கு விரோதமில்லாது, முஸ்லிம்களது அபிலாசைகளை சுமந்து கொண்ட
ஆட்சியை மாகாணத்தில் ஏற்படுத்தவேண்டுமென்பதே கட்சி அரசியலுக்கப்பால் முஸ்லிம் ‘உம்மா’வின் உண்மையான எதிர்பார்ப்பாகும். இவ்வெதிர்பார்ப்பு நிறைவேறுமா?!
0 கருத்துரைகள் :
Post a Comment