animated gif how to

மூதூர் நத்துவதுல் உலமா அரபுக் கல்லூரியின் 38 வது பட்டமளிப்பு விழா

September 19, 2012 |

-மூதூர் முறாசில்-

மூதூர் நத்துவதுல் உலமா அரபுக் கல்லூரியின் 38 வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமையன்று (2012.09.22) மாலை 4.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் பிரதம நிருவாகி அஷ்ஷெய்க் எஸ்.ஏ.ஜப்பார் தலைமையில் கல்லூரி அதிர் அஷ்ஷெய்க் எம்.எம்.கரீம் நத்வியின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ள இவ்விழாவில் அகில இலங்கை ஜம்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இப்பட்டமளிப்பு விழாவில் ‘‘HPM’ கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 111 மாணவர்களுக்கு மௌலவிப்பட்டங்கள் வழங்கப்படவுள்ள அதேவேளை அல்- குர்ஆன் மனனப் பிரிவில் 24 மாணவர்களுக்கு அல்- ஹாபிழ் பட்டங்களும் வழங்கப்படவுள்ளன.
இதன் போது கல்லூரியின் 56 வது வருட பூர்த்தியை முன்னிட்டு சிறப்பிதழ் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!