animated gif how to

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தில் பாரிய அநீதி; சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறது சர்வதேச இளைஞர் பாராளுமன்றம்!

July 24, 2012 |

மீள்குடியேற்றம் தொடர்பில் வட மாகாண முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாரிய அநீதி குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று அழுத்தம் கொடுக்கும் நோக்கில் சர்வதேச இளைஞர் பாராளுமன்றம் ஏற்பாடு செய்து வருகிறது என்று அதன் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் அல்-இஹ்ஸான்‌ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தமது பூர்வீக பூமியான வடக்கில் வந்து முஸ்லிம்கள் குடியேறுங்கள் என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த மக்கள் மீள்குடியேற வரும்போது சிலஆயுதக் குழுக்களில் இருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மதம் சார்ந்தவர்களும் அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்..
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதித் தலைவர் முயிஸ் வஹாப்தீன் இது தொடர்பில் மெட்ரோ மிரருக்கு மேலும் தெரிவிக்கையில்;
விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இன்னும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் அகதிகளாக இருக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள சாதாரண சூழலில் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களுக்கு வருகின்ற போது அங்கு வேறு ஒரு இனத்தை சேர்ந்த மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அவர்கள் கூடியமர்ந்தால் பரவாயில்லை அருகிலுள்ள காணிகளில் முஸ்லிம்கள் தமது வீடுகளை அமைத்து வாழ வழி செய்ய நடவடிக்கைகள் எடுத்தபோது அதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை ஆயர் அவர்கள் முன்னெடுப்பது கவலையளிக்கின்றது. அன்று புலிகளை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் அன்று புலிகள் எதனை செய்தார்களோ அதே போன்று சில அரச அதிகாரிகளும் மத தலைவர்கள் சிலரும் செய்கின்றனர். இந்த நிலையில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் நிலையினை எண்ணி பார்க்க வேண்டியுள்ளது.
அமைச்சர் ரிசாத் மீள்குடியேற்ற விடயங்களில் ஏற்படுத்தப்படும் தடைகள் குறித்தும் அதனை செய்பவர்கள் குறித்தும் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்த போது அதனை திரிவுபடுத்தி, அவர் ஒரு மதவாதி என்றும் கத்தோலிக்க சமூகத்திறகு எதிரானவர் என்றும் பிரசாரம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுக்கு துணையாக பல தமிழ் ஊடகங்கள் அவற்றை ஊதி பெருதிபடுத்தி பிரசுரிக்கின்றன.
முஸ்லிம் சமூகத்தின் விமோசனத்திற்காக ஒரு முஸ்லிம் அமைச்சர் பேசினால் அவரை ஒரு தீவிரவாதியாகவும் கத்தோலிக்க மத்தியில் அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர். உண்மையினை ஆதாரபூர்வமாக எடுத்துரைத்தமைக்கு மன்னிப்பு கொர வேண்டும என்று சிலர் கூவித் திரிகின்றனர்.
ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் தவறு செய்தால் அதனை பாதிக்க்ப்பட்டவர் மன்னிக்காத வரை இறைவன் அவனை மன்னிக்கமாட்டான் என்பதை நாம் தெளிவாக ஏற்றுள்ளோம். ஒட்டுமொத்த வட மாகாண முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதனை தட்டிக்கேட்க வேண்டியது அவரது பொறுப்பாகும். அது அரசியல் உயர் மட்டமாக இருந்தால் என்ன, ஏனையவர்களாக இருந்தால் என்ன?
இந்த நாட்டில் ஆயுத ரீதியாக போராட்டங்களை நம்பி தம்மையும் அழித்து தமது தமிழ் சமூகத்தின் எத்தனையோ உயிர்களையும் உடமைகளையும் இல்லாமல் ஆக்கி அந்த எதிர்பார்ப்புகளை அடைய முடியாமல் போன வரலாறு இன்று இருக்கின்றது. ஆயுத போராட்டத்தில் இருந்த புலிகளுக்கு எதிராக வடக்கு முஸ்லிம்கள் எந்த காட்டிக் கொடுப்புகளையும் செய்யவில்லை. அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது வடக்கில் விரும்பியோ விரும்பாமலோ சில விடயங்களை செய்தாக வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட முஸ்லிம் சமூகத்தைக் கூட வெளியேற்றிய வரலாறு உள்ளது.
இன்று அந்த நிலை மாற்றப்பட்டு தமிழர்கள், முஸ்லிம்கள் அவர்களது பிரதேசங்களில் வாழக்கூடிய நிலையேற்பட்டுள்ளது. இருந்த போதும் முஸ்லிம்கள் மீள்குடியேற செல்லும்போது மன்னார் ஆயர் அவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி எமது மீள்குடியேற்றத்தை தடுக்க முனைவது எந்த வகையில் நியாயம்?
தமிழ் சகோதரி ஒருவர் தமது காணியினை முஸ்லிம் சகோதரருக்கு விற்பனை செய்வதற்கு தயாரான போது, அந்த பெண்ணை அழைத்து நீ காணியினை முஸ்லிம்களுக்கு விற்றால் உனக்கு சாபம் இடுவேன் என மன்னார் ஆயர் கூறிய நிகழவையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அமைச்சர் றிசாத்தை பொறுத்த வரையில் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் அற்ற ஓர் அரசியல் தலைவராக திகழ்கிறார். பதவி, அந்தஸ்த்து, அதிகாரம் மற்றும் சொத்துகளை தருபவன் அல்லாஹ். அவன் நாடினாலன்றி எதுவும் இடம்பெறாது என்ற அசையாத நம்பிக்கை கொண்டவர்கள் முஸ்லிம்கள். இந்த உலகை விட்டு பிரியும் போது நாம் வெறும் கபன் துணியுடன் தான் செல்வோம் என்பதை தெளிவாக ஏற்றுக் கொண்ட சமூகத்தை சார்ந்தவர்கள் முஸ்லிம்கள்.
அந்த வகையில் எமது வட மாகாண முஸ்லிம்கள் அகதி முகாம்களில் மட்டுமல்ல சில பிரதேசங்களில் யாசகம் கேட்டு தங்களுடைய வாழ்க்கையை கொண்டு நடத்துவதை கானுகின்ற போது மனம் வெதும்பி வேதனைப்படுகின்றேன். அந்த மக்கள் வாழ்ந்த பூமியில் அவர்களை வாழ விட்டிருந்தால் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
இவ்வாறு இருந்தும் துரதிஷ்டம் வடமாகாண முஸ்லிம்கள் அவர்களது தாயக பூமியில் மீள்குடியேற வந்தால் அதனை வித்தியாசமாக சித்தரித்து முஸ்லிம்கள் காணிகளை அபகரிக்கின்றனர் என்று முறைப்பாடு செய்வதை கானுகின்றோம். இலங்கை முஸ்லிம்களுக்கான தனியான ஊடகமொன்றில்லை. இருந்திருந்தால் எமது தரப்பு நியாயங்களை நாம் வெளிப்படுத்த முடியும்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் எமக்கு எதிராக முன்னெடுக்கப்டுகின்ற சதி திட்டங்கள பற்றியும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினால் சில தமிழ் ஊடகங்கள் அதனை கவனத்தில் எடுக்காது பிழையான செய்திகளை முக்கியப்படுத்தி வெளியிடும் கலாசாரத்ததை தான் காண முடிகின்றது. இப்படிப்பட்ட ஊடகங்களில் பணியாற்றும் முஸ்லிம்கள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இல்லாத விடத்து அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவர். எனவே மனதில் நேர்மையான சிந்தனையியனை கொண்டிருந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலையினையே கானுகின்றோம்.
வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் முழுமையாக நடை பெறாத பட்சத்தில் இந்த நாட்டில் எந்த ஒரு நிலையான தீர்வை எவராலும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினை தீர்கக்ப்பட்டு அவர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். அந்த தீர்வினை பெற்றுக் கொடுக்கும் ஜனநாயக போரட்டத்திற்கு முஸ்லிம்கள உறுதுனையாக இருப்பார்கள். அதே போன்று அல்லலுறும் முஸ்லிம் அகதிகளுக்காக தமிழ் தலைமைகள் இதய சுத்தியுடன் செயற்பட முன்வர வேண்டும்.
இன்று வடக்கில் பெரும்பான்மை மக்களின் குடியேற்றம் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் இரானுவத்தின அதிகரித்த பிரசன்னம் குறித்து பேசுபவர்கள் அதற்கு எதிராக செயற்பட முஸ்லிம்களையும் அழைக்கின்றனர்.
முஸ்லிம்கள் மீள்குடியேற செல்லும் போது அரசியல் தலைமைகளும் இனவாத சிந்தனைக் கொண்ட அரச அதிகாரிகள் சிலரும் மத தலைவர்கள் சிலரும் செயற்படும் போது தமிழ் பேசும் மக்களாகிய முஸ்லிம்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் என்ற யதார்த்தத்தை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் இடம்பெயரந்த மக்கள் தமது தேவைகளை பெறுகின்ற போது அதிலும் பிளவுகளை தோற்றுவிக்க அரச சார்பற்ற நிறுவனங்களும் யூ.என்.எச்.சீ.ஆர். அமைப்பும் செயற்பட்டு வருகின்றன. புதியஇ பழைய அகதிகள் என்று பிரித்து வருகின்ற உதவிகளை புதிதாக இடம்பெயர்ந்தவர்களுககு மட்டும் வழங்கி 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு எதையும் வழங்காத நிலை உருவாக்கப்பட்டது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இது குறித்து ஜெனீவாவில் உள்ள யூ.என்.எச்.சீ.ஆர். தலைமையகத்துக்கு முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றேன்என்று குறிப்பிட்டார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!