எகிப்து பாராளுமன்றத்தை நாட்டின் உச்ச அரசியல் சாசன நீதிமன்றம் கலைத்த நடவடிக்கையை
ரத்துச் செய்த புதிய ஜனாதிபதி முஹம்மது முர்ஸியின் நடவடிக்கையால்
ராணுவ கவுன்சில் (SCAF) அதிர்ச்சி அடைந்துள்ளது.
முர்ஸியின் உத்தரவு வந்த உடனேயே ஸ்காப் உறுப்பினர்கள் அவசரமாக கூடி நிலைமைகளை குறித்து
விவாதித்தனர். ஆனால், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
குறித்து ஸ்காப் வெளியிடவில்லை. ஆனால், முர்ஸியின் முடிவுக்
குறித்தும், இம்முடிவுக்கு என்ன
காரணம் என்பது குறித்தும்
தங்களுக்கு தெரியும் என முன்னாள் ராணுவ ப்ராஸிக்யூட்டர் ஜெனரல் ஸயீத் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
முர்ஸியின் உத்தரவால், எகிப்தில் ஜனாதிபதிக்கும், ராணுவத்திற்கும்
இடையே புதிய மோதல் சூழலை உருவாக்கும் என அரசியல்
சாசன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், முர்ஸியின் உத்தரவை இஹ்வானுல் முஸ்லிமீன்
தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
முன்னாள் சர்வதேச அணுசக்தி நிறுவன தலைவர் முஹம்மது அல்பராதி, முர்ஸியின் உத்தரவில் கருத்து
முரண்பட்டுள்ளார். பாராளுமன்ற கூட்டம்
நடத்துவதற்கான முர்ஸியின் உத்தரவு சட்ட விரோதமானதும், நீதிமன்றத்தை அவமதிப்பதுமாகும் என பராதி
கூறினார்.
கடந்த மாதம் 14-ஆம் தேதி அரசியல்
சாசன உச்சநீதிமன்றம்
பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அன்று ஆட்சியில் இருந்த ராணுவ கவுன்சில்
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியது.
0 கருத்துரைகள் :
Post a Comment