எக்ஸ்தமிழ்நியுஸ்: சவுதி அரேபியாவில் புத்தர் சிலையை வைத்து
வணங்கியவருக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதென
வெளியாகியிருந்த செய்தி பொய் என சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அண்மையில்
இலங்கையில் ஏற்பட்ட மதப் பிரச்சினைகளை
அடுத்து
இந்தப் பொய்ப் பிரசாரம் பௌத்த அமைப்பினரால் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து
விடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் இதன் மூலம் எழுகிறது அல்லவா..?
இலங்கையில் இயங்கும் பௌத்தவாத பொது படையணி தமது ஊடக நண்பர்களைப் பயன்படுத்தி இந்த
முஸ்லிம் விரோத பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.
எனினும் தூதரகம் விடுத்த அறிக்கையால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது.
தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு சம்பவத்தையடுத்து இந்த பௌத்தவாத குழு
முஸ்லிம் எதிர் நடவடிக்கைகளில் ஈடபட்டு வருகிறது.
இக்குழு மத ரீதியில் மாத்திரமன்றி அரசியல் ரீதியிலும் பலமடைய ஆரம்பித்துள்ளது.
இக்குழுவுக்கு நாட்டின் நிர்வாகத் தலைவர்களின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டதனை
அவர்கள் தம்புள்ளையில் நடந்து கொண்ட விதத்தில் காண
முடிந்தது.
இஸ்ரேல் தூதரக தொடர்பு குறித்து நாட்டில் எழுந்த முஸ்லிம் எதிர்ப்புக்கு பழிவாங்கும் செயலாகவும் இதனைக் கருத முடிகிறது. இந்த நாட்டில் தமிழர்கள் வரலாற்றில் கணக்கில் எடுக்கப்படாது இருந்த நிலையில் முஸ்லிம்களுக்குச் சற்று மதிப்பு இருந்தது. ஆனால் இன்று அந்த நிலையும் மாறியுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment