14-06-2012 விடிவெள்ளி
பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை: இலங்கையின் இன முரண்பாடு கூர்மையடைந்
தமைக்கு ஊடகங்களும் கணிசமானளவு பங்களித்திருக்கின்றன என்ற உண்மையை நாம்
மறந்துவிடுவதற்கில்லை.
தமிழ்
மக்கள் தொடர்பில் சிங்கள ஊடகங்கள் அன்று வெளியிட்ட தவறான தகவல்கள்தான் இன்று இந்த
நாட்டில் தமிழர்களையும் சிங்களவர்களையும் நிரந்தர பகையாளிகளாக மாற்றி
வைத்திருக்கிறது.இதன் தொடரில் இன்று சிங்கள ஊடகங்கள் முஸ்லிம்களைக் குறிவைத்து
செய்திகளை வெளியிட ஆரம்பித்திருக்கின்றன.
அண்மைக்
காலமாக முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையில் முரண்பாட்டைத் தோற்றுவித்து
இன்னுமொரு பிரச்சினையைத் தூண்டிவிட சில தீய சக்திகள் முயற்சித்து வருவதை அவதானிக்க
முடிகிறது.
அந்த
வகையில்தான் கடந்த 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை
வெளியான ‘மவ்பிம’ பத்திரிகையில் ‘யா
அல்லாஹ்… இவர்களை மன்னித்துவிடு’ எனும்
தலைப்பில் பிரபாத் அத்தநாயக்க என்பவர் எழுதியிருக்கும் கட்டுரை கிழக்கு மாகாண
முஸ்லிம்கள் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் மிகத் தவறான கருத்துக்களைப்
பரப்புவதற்கு வழிவகுத்துள்ளது.
இதன்
பாரதூரத்தை முஸ்லிம் சமூகத்திற்குப் புரிய வைக்கும் நோக்கில் குறித்த கட்டுரையை
இங்கு தமிழில் மொழிபெயர்த்து தருகிறோம்.
பள்ளிவாசல்களைப்
பற்றியும் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலும் தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் இக்
கட்டுரை தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதும் உண்மையைத் தெளிவுபடுத்த
வேண்டியதும் அரசியல்வாதிகள் மற்றும் சமூக தலைவர்களின் கடமையாகும்.
தமிழில்:
எம்.எப்.எம்.பஸீர்
சர்வ மதங்களுமே ஏதேனும் ஒரு சிந்தனையை அடிப்படையாகவே கொண்டுள்ளது.
மதத்தைப் பின்பற்றும் ஒருவர் பொறுமை காக்க வேண்டியதும் அச்சிந்தனையின்
அடிப்படையிலேயே. சிந்தனை ஊடாக உதயமான மதத்தை அச்சிந்தனைக்குள் அடிமைப்படுத்தும்
அடிப்படை வாதத்திலிருந்து எழுச்சியுடன் மேலெழ முடியும். இதன் காரணமாகவே பௌத்த
சிந்தனைகளுக்கு எவ்வகையிலும் ஒவ்வாத ‘அசபு’ வழிமுறையூடாக ஆத்மா சாந்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவானது.
கத்தோலிக்க பாதிரியார்களை தோல்வியடையச் செய்து போதகர்கள் முன்னிலைக்கு வந்து
குறுகிய காலத்தில் காணாமல் போகின்றமையை காணக்கூடியதாக உள்ளது. இக்கட்டுரையின்
உள்ளடக்கம் முஸ்லிம் சமயத்தின் சிந்தனைக்கு முரணாக கிழக்கு மாகாணத்தில் தலை
தூக்கிக் கொண்டிருக்கும் அடிப்படைவாத குழுவொன்று சம்பந்தமாக சிறு அறிவுறுத்தல்
செய்வதேயாகும்.
காத்தான்குடி, கிண்ணியா போன்ற பிரதேசங்களில் நாங்கள் இந்த முஸ்லிம்களோடு செய்த
பயணங்களில் அவர்கள் சுட்டிக்காடியது வெளிப்படையாக உணரக்கூடிய இந்த துரதிஷ்டமான
பதிவாகும். காத்தான்குடியில் தொழுகையை முடித்துக் கொண்டு பள்ளிக்கு வெளியில் வந்த
பலரிடம் நாளொன்றுக்கு எத்தனை முறை தொழுகையில் ஈடுபடுகிறீர்கள் என நாம் வினவிய போது, 5 தடவைகள் நிறைவேற்ற முயற்சிப்பதாக அவர்கள்
குறிப்பிட்டனர்.
காத்தான்குடி
பிரதேசத்தில் பள்ளியொன்றில் செய்த அறிவுறுத்தலொன்று (கட்டளை) குறிப்பிட்ட ஒரு
அமைப்புக்கு அங்குள்ள வியாபாரிகள் தினந்தோறும் குறிப்பிட்ட அளவு நிதியினை கொடுக்க
வேண்டும் என்பதை வெளிப்படுத்தியது. ஆனால் அந்த நிதித்தொகையை நிர்ணயிப்பது
பள்ளிவாசலே. இப்போது பள்ளிவாசல்கள் நிறைய மத ரீதியான பரிமாற்று வேலைத் திட்டங்களை
செய்கின்றன. கடந்த மாதம் உள்ளடங்களாக மத சம்பந்தமாக மேலதிகமாக கற்றுக் கொள்ளும்
பொருட்டு 50 க்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றக் கூடிய
நாடொன்றுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு பல்கலைக்கழக மாணவர்களுக்குரிய
பயற்சியளிக்கப்படுகிறதாம். அந்த பயிற்சிகளோடு ஆயுத பாவனை என்ற விடயமொன்றும் உள்ளடக்கி
சொல்லப்படுகிறது. அதனால் இப் பயணத்துக்கு இளம் பிள்ளைகள் அதிகம் விரும்புகின்றனர்.
இப்போது கிழக்கு மாகாணத்தில் சிறிய அளவில் ஆயுதக் குழுக்கள் உள்ளன.
கிரீஸ்
பேய்கள் தொடர்பில் பயம் இருந்த நாட்களில்தான் இவர்கள் ஆயுதங்களை கையிலெடுத்தனர்.
அதன் பின்னர் அந்த ஆயுதங்களை மீண்டும் நிலத்தில் வைக்கவில்லை. கிரீஸ் பேய் தங்கள்
மதத்துக்கு எதிரானது என ஒவ்வொருவரும் சொல்லத் தொடங்கியதன் பின்னர் அவர்கள் அதனை
ஏற்றுக் கொண்டனர்.
‘ஜிஹாத்’ போன்ற அமைப்புக்களின் சரித்திரம் தெரிந்தவர்கள் சொல்ல முற்பட்டது
இராணுவச் சிப்பாய்கள் சிவில் சமூகத்துக்கு மத்தியில் வெவ்வேறு பயிற்சிகளை
அளிக்கின்றனர். இந்த கிரீஸ் பேய் என்று சொல்வதும் அதைப் போன்ற ‘ட்ரெய்னிங்’ ஒன்றே. அவர்களின் மற்றொரு கருத்து எங்களுக்கு தெரியாமலே எங்களை
மிலிடரி பயிற்சியொன்றுக்கு ஈடுபடுத்துவதனால் அதற்கு பதிலளிக்க வேண்டியிருப்பது
இன்னொரு மிலிடரி பயிற்சியின் ஊடாகவே என்பதாகும்.
கிழக்கின்
சாதாரண முஸ்லிம் பிரஜைகள் இவ்வாறான அமைப்பாக மாறுவதற்கு முஸ்லிம்
அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் விருப்பமில்லை. ஏனெனில், அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டுமென்பதை பள்ளிவாசல் முன்
வைத்ததில்லை. இந் நிலைமை இன்னும் இப்படியே நீடித்தால் தங்களுக்கென்று தனியான நாடு
வேண்டும் என்ற நிலைமைக்கு கிழக்கு முஸ்லிம்கள் போகலாம். இப்போதும் அச் சிந்தனையில்
உள்ள அதிகமானவர்கள் கிழக்கில் உள்ளனர். அவர்களுக்கு தேசிய அமைப்புக்கள் போன்றே
வெளி நாட்டு அமைப்புக்களும் பெருமளவில் உதவி செகின்றன.
இது
எதுவும் அல்லாஹ்வின் தர்மத்துக்கு உட்பட்டதில்லை. அல்லாஹ் ஒருபோதும் மதத்தை
பரப்புவதற்கு கட்டாயப்படுத்த வேண்டும் என எதுவும் சொல்லவில்லை. மதத்தை பலிக்கடாவாக
எடுத்துக் கொண்ட இந்த நாசகரமான வேலைகளுக்கு அல்லாஹ் ஒரு போதும் மன்னிப்பு வழங்கப்
போவதில்லை.
கல்விக்கு
கௌரவமளிக்கும் பிரிவு என்ற வகையில் நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. உயர்
கல்வியை மேற் கொண்டு வைத்தியராகவோ பொறியியலாளராகவோ வருவதற்கு விருப்பம் இருந்தும்
அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காதவிடத்தும் அல்லாஹ்வின் நாட்டம் காரணமாக அது அவருக்கு
கிடைக்கக் கூடியதே. அதனால் மதத்தை மட்டும் படித்து விட்டு அல்லாஹ்வுக்காக தியாகம்
செய்வதென்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலைமையாகும்.
எனினும்
கிழக்கு மாகாணத்தில் இவ்வாறு நடைபெறுகிறது. உயர் கல்வியை கைவிட்டு மதத்துக்காக
மட்டும் விருப்பமின்றி தியாகத்துடன் கற்கும் திறமையான மாணவர்கள் அதிகமானோர் இன்று
கிழக்கில் உள்ளனர்.
அடுத்தது
தான் பள்ளிவாசல் கூறும் குறித்த விடயங்களை மட்டும் கற்றல் என்பதாகும். இற்றைக்கு
சில மாதங்களுக்கு முன்னர் அரசின் பரீட்சை திணைக்களம் ஏற்பாடு செய்த பரீட்சைகளில்
மொழியை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் பிள்ளைகள் அதிகமாக உயர் கல்விக்கு தகுதி
பெற்றனர். குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அந்த செய்தியை அல்லது
கட்டளையை வழங்கியது பள்ளிவாசலாகும். அதற்குக் காரணமானது அவ் விடயம் தொடர்பாக
எதிர்காலத்தில் ஏற்படும் கேள்விக்கு ஏற்றால் போல் உற்பத்தியை இப்போதே செய்திருக்க
வேண்டும் என தீர்மானம் எடுத்துள்ளமையாகும். எனினும், அந்த
அமைச்சரும் அந்த தீர்மானத்தை செயற்படுத்தியதும் பள்ளிவாசல் அவருக்கு விதித்திருந்த
தடையை குறைத்துக் கொள்ளவே. அது போன்ற கொடுக்கல் வாங்கல்கள் அல்லாஹ்வினால்
ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை.
அவன்
தான் நாடுவோருக்கு ஞானத்தை வழங்குகிறான். எவர் ஞானம் கொடுக்கப்படுகின்றாரோ அவர்
நிச்சயமாக அதிக நன்மைகள் வழங்கப்பட்டவராவார். சிந்தனை உடையோர் தான் படிப்பினை
பெறுவார்கள். (2/269), (தர்மத்தை எதிர்பாத்து) நீங்கள் எதை செலவு
செய்தாலும் அல்லது எதையேனும் நேர்ச்சை செய்தாலும் அதை நிச்சயமாக அல்லாஹ்
நன்கறிவான்.
புனித
அல்குர்ஆன் (சிங்கள மொழிபெயர்ப்பு) பக்கம் -57 அவர்
அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை காட்டி தெளிவுபடுத்திய விடயங்கள் கல்வியை
பெறுவது தொடர்பில் மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.
இது
தொடர்பில் உண்மையை புரிந்து கொள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் மாணவர்கள் பெற்றுக்
கொள்ளும் கல்வி குறித்து கணக்கெடுப்பொன்றை மேற்கொள்வது பொருத்தமானதல்ல. பள்ளிவாசல்
ஒரு போதும் அதுபோன்ற கணக்கெடுப்பின் போது உண்மையை சொல்ல
இடம் கொடுப்பதில்லை.
இங்குள்ள
கவலைக்குரிய விடயம் இதுதான். தனிப்பட்ட ஆய்வுகள் தவிர பொதுவான மட்டத்தில்
ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு எவருக்கும் முடியாது. இப்போது இந்த அடிப்படை பைத்தியம் ‘ஜிஹாத்’ மொசாட் அமைப்பு வரை நீண்டு சென்றுள்ளது. நாங்கள் இப் பைத்தியத்தை
விரும்பவில்லை என்பதைப் போலவே இது இறைவனின் பள்ளி என சொல்லிக்கொண்டு வேண்டியதொன்றை
செய்யும் பிரிவொன்றும் உள்ளது.
இன்று
கிழக்கு மாகாணத்தில் பலம் வாந்தவர்கள் அவர்களே! இன்று வெள்ளிக்கிழமை
பள்ளிவாசலுக்குப் போய் சுதந்திரமாக வீடு திரும்புவது கஷ்டமாக உள்ளது. அதிகமாக
அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு பள்ளிவாசலில் கூடிய இடம் கொடுக்கப்படுகிறது.
கல்வி
செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபட மதம் தேவையான அளவு இடம் கொடுத்துள்ளது. அதற்கு
எந்தவொரு பாதிப்பும் இல்லை. அறிவை பெற்றுக் கொள்ள வேண்டியது எந்த விடயத்தில் என
பள்ளிவாசல் தீர்மானம் எடுக்கும் போது தான் பிரச்சினை உருவாகிறது. மார்க்கக்
கல்வியை மட்டும் யாருக்கும் பெற்றுக் கொள்ள முடியுமென பள்ளிவாசல் சொல்லுமானால் அது
அல்குர்ஆனுக்கு அப்பாற்பட்டதாகும். இந்த மாகாணத்தின் பள்ளிவாசல்களுக்கு வரும் ஆண்
பிள்ளைகள் பெரும்பாலானோருக்கு சமய புத்தகங்கள் தொடர்பில் கற்குமாறு பள்ளிவாசல்கள்
வற்புறுத்துகிறன. அது தவறான செயற்பாடாகும். உலகம் தொடர்பில் சமாந்தரமான அறிவொன்று
இன்றி கிடைக்கும் மார்க்கக் கல்வியானது நல்ல மனிதனாக சிந்தித்து செயற்படும்
அளவுக்கு மனிதனை மாற்றாது. மார்க்க கல்வி பெறும் ஒருவருக்கு பள்ளிவாசல் 20000 ரூபாவை மாதத்துக்கு செலவு செய்கின்றது.
குறித்த உதவித் தொகையை பெறுபவர் கட்டாயமாக அந்த 20 ஆயிரம்
ரூபாவையும் முஸ்லிம் சமயக் கல்விக்காக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.
அங்கு
உருவாகும் மற்றொரு நிலைதான் அரபு உலகத்துடன் அல்குர்ஆனை ஒன்றிணைப்பதாகும். அந்த
ஒன்றிப்பு இடம்பெறுவது அடிப்படைவாதத்தின் அடிப்படையிலேயாகும். அரபு உலகம் நாளுக்கு
நாள் மாறுகின்றது என்பதை தெரியாத மௌலவிமார்கள் செய்வது மதத்துடன் இறுக்கமான
உறவினைக் கொண்டுள்ள அரபு உலகத்துக்காக நாங்கள் இருக்க வேண்டும் என்ற
பிரச்சாரமாகும். மத ரீதியிலான சந்திப்புக்களின்போது அரபு உலகின் பின்னால் உள்ள
நட்பு நாடுகள் அனைத்தையும் எமது நட்பு நாடுகளாக நினைத்து செயற்படுதல் வேண்டும் என
அதற்கிடையில் சொல்லிக் கொள்கிறார்கள்.
என்னுடன்
கருத்து பரிமாறிக் கொண்ட முஸ்லிம் சமூகத்தவர் அல்லாஹ்வால் முழு உலகத்துக்கும்
வரப்பிரசாதமாக அனுப்பி வைக்கப்பட்ட முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வழியில்
உலகத்தவருக்கு ஞாபகப்படுத்தும்முகமாக இறக்கப்பட்ட புனித நூலான அல்குர்ஆனை பரிசீலனை
செய்வதுடன் அதன்படி வாழ்வை அமைத்துக்கொள்ள கடும் முயற்சியுடன் செயற்பட்டார்.
எங்கள் கிழக்கு மாகாண நகரங்கள் பலவற்றில் பயணத்தை ஆரம்பித்து சில மணி நேரத்தின்
பின் அவர் அவ்வாறு கதையை ஆரம்பித்தார்.
பேச்சின்
ஆரம்பத்தில் எந்தவிதமான அவசரமும் இருக்கவில்லை. அல்குர்ஆன் சிந்தனை தொடர்பில்
தேடிப் பார்க்கும் தர்ம நூல் ஆகும் என்ற வகையில் அவரது விளக்கங்கள் இருந்தன.
பள்ளிவாசல் கொண்டு வந்த யோசனைகளுக்கிடையே அதிகமானவை முன்னேற்றம் இல்லை.
தொழுகையை
5 நேரம் நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்கு பொருத்தமான இடமொன்று
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு சூழலொன்று தேர்ந்தெடுக்க கடினமான
சந்தர்ப்பத்தில் தொழு கையை நிறைவேற்றுவது கடினமாகும். இந்த நிலைமையை
பள்ளிவாசல்களுக்கு தெளிவுபடுத்தச் சென்றவர்கள் ஒருசிலரின் செயற்பாடுகளினால்
இக்கட்டான நிலைமைக்கு உள்ளானார்கள்.
பள்ளிவாசலில்
தொழுகையில் ஈடுபடுபவர்கள் சொல்வதை நம்பாமல் தனியாக பயணத்தை மேற்கொள்ளவே
முயற்சித்தோம். இது அப்படி பயணமொன்றை மேற்கொள்ள முடியுமான காலமல்ல. நாங்கள்
வழக்கமாக தவறாமல் வெள்ளிக்கிழமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையில் ஈடுபட்டோம்.
அது அக்காலம் முழுவதும் இடம்பெற்றதொன்று. அங்கு நாம் தொழுகையில் ஈடுபட்டுவிட்டு
தலையை விடுதலை செய்து கொண்டு இந்த வேலையை ஆரம்பித்தோம். நாளுக்கு 5 நேரம் தொழ வேண்டும் என்ற நீதி பள்ளியின் தேவைக்காக கொண்டு
வந்ததுதான். இருப்பினும் இதனை மக்கள் பின்பற்றுவார்கள் என்று அவர்கள்
எதிர்பார்க்கவில்லை.
எனினும்
மக்கள் எவ்விதமான எதிர்ப்புமின்றி அந்த வேலையை ஆரம்பித்தனர். நாளுக்கு 5 நேரமும் தொழுகை இடம்பெறாத பள்ளிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
அவை முறைப்பாடுகளாக பொலிஸாருக்கு செல்வதில்லையென்பதால் யாரும் அது தொடர்பில்
அறிந்து கொள்ளவில்லை. பின்னர் அப்பள்ளிவாசல்களில் மீண்டும் நாளுக்கு 5 தடவை தொழுகை இடம்பெற்றன.
உண்மையான
முஸ்லிம் என்பது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றி வாழும் ஒருவரே. அவர் யாருக்கும்
தொல்லை கொடுப்பவரல்ல. முழு வாழ்க்கையையும் அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்த ஒருவர்
பொய்யாக நாளொன்றுக்கு 5 தடவைகள் அல்குர்ஆனை ஓதிக் கொண்டு தொழுகையில் ஈடுபடுவதை செய்ய
வேண்டியதில்லை. அல்லாஹ் மற்றும் அல்குர்ஆன் என்பன முழு வாழ்விலும் அவருடன்
பின்னிப் பிணைந்ததொன்று.
பள்ளிவாசல்
ஏதாவதொரு புதிய நீதியொன்றை கொண்டு வந்ததும் அதற்கு முதலாவதாக ஒத்துழைப்பு
வழங்குவோர் பெரிய பெரிய வியாபாரிகளே! யாருக்கும் தெரியாமல் இருப்பினும் அவர்களின்
பிஸ்னஸ்களுக்கு வங்கிகளில் கூடுதலான பணத்தை வைப்பிலிடுவது பள்ளிவாசல்களாகும்.
சவூதி அரசு இலங்கையில் பள்ளிவாசல்களை அபிவிருத்தி செய்ய பாரிய தொகையை செலவு
செய்கின்றது. பள்ளிவாசலுக்கு இன்று எந்தவொரு வியாபாரத்தையும் நிறுத்த முடியும்.
அல்-குர்ஆன் சொல்லாத விடயமாக இருப்பினும் பள்ளிவாசல் சொல்லுமிடத்து ஏற்றுக்
கொள்ளும் நிலையில் வந்திருப்பதானது பெரிய பெரிய பிஸ்னஸ்களுக்கு பள்ளிவாசல் பணத்தை
செலவழிப்பதாலாகும்.
இந்த
முஸ்லிம் பிரஜையின் உண்மையான தரவுகளை சரியான முறையில் அறிந்தவன் என்ற வகையில் அவர்
தொடர்பில் உங்களுக்கு பொறுப்புக் கூற சந்தர்ப்பம் உண்டு. அவர் உண்மையான முஸ்லிம்
ஒருவராவார். இந்த தகவல்களை தலைக்கெடுக்கும் இளையவர்கள் தங்கள் குடும்பங்களில்
உள்ளவர்களைக் கூட மனிதர்களாக மதிப்பதில்லை. தனது தங்கை தவறு செய்தாலும் கல்லடித்து
கொல்ல வேண்டும் என்ற மன நிலையில் தான் அவர்கள் இருக்கிறார்கள்.
அதற்கான
காரணம் மார்க்க கருத்துக்கள் திரிவுபடுத்தி காட்டப்படுவதாகும். யாராவது ஒருவர்
தவறு செய்தால் எப்படி அதற்கு மன்னிப்பளிப்பது என்பது மார்க்கத்தில் தெளிவாக
காட்டிக் கொடுக்கப்பட்டிருக்க இவ்வாறு பள்ளிவாசல்கள் செயற்படுகின்றமை சிலரின்
குறுகிய நோக்கங்களுக்காகவே என்பது உண்மைக் கதையாகும்.
கிழக்கு
விசேடமான மாகாணம் ஆகும். இங்கு முஸ்லிம் மற்றும் தமிழர்களே பெரும்பாலும்
வாழ்கின்றனர். இலங்கையின் மக்களிடையே உள்ள இன வேறுபாடுகளை காட்டி பிரதேசத்தில்
அமைதியின்மையை ஏற்படுத்த சில அடிப்படைவாத குழுக்கள் முயற்சிக்கின்றன. இதற்கு இடம்
கொடுக்காமல் இருப்பது அனைவரதும் கடமையாகும்.
0 கருத்துரைகள் :
Post a Comment