animated gif how to

கல்முனையில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை

June 15, 2012 |

-அகமட் சௌஜீர்-


கல்முனை மாநகர பிரதேசத்தின் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர கட்டிடங்களை அகற்றுவதற்கு மாநகர சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.​

மேற்படி விடயம் தொடர்பான கலந்துரையாடல் முதல்வர் செயலகத்தில் 14.06.2012ல் மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

சுனாமி அனர்த்த வலயத்தில் காணப்படும் இடிபாடிற்குள்ளான கட்டிடங்களினால் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதனாலும் கழிவுப்பொருட்களை இடுவதனாலும் குறித்த கட்டிடங்களை அகற்றி பூங்கா வனங்களாக, விளையாட்டு மைதானங்களாகமாற்றி அமைக்கப்படவுள்ளது.

குறித்த கட்டிடங்களை இனம்காணும் பொருட்டு எதிர்வரும் 18.06.2012ம் திகதி திங்கட்கிழமை அப்பிரதேசங்களுக்கு மாநகர முதல்வர், மாநகர உறுப்பினர்கள், மாநகர அதிகாரிகள், நகரஅபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், யுனப்ஸ் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்யவுள்ளனர்.அதன் பின்னர் அவை யுனப்ஸ் நிறுவனத்தின் உதவியோடு அகற்றப்படவுள்ளது.

மேற்படி கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்கள்மாநகர பொறியியலாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள்,யுனப்ஸ் நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 கருத்துரைகள் :

Anonymous said...

சுனாமியின் இடிபாடு எச்சங்கள் அகற்றபடாத பிரதேசம் என்றால் கல்முனை தான்,கடந்த காலத்தில் மேயராக இருந்தவரால் முடியாததை,புதிய மேயர் செயல்படுத்த முயலும்போது எம்.பி.இனது ஒத்துழைப்பு .....? இருந்தாலும் மேயர் இதில் பின்வாங்காமல் இடிபாடுகளை அகற்றும் பணியை துரிதமாக மேற்கொள்ளவேண்டும். பணி தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

Flag Counter

Free counters!