animated gif how to

"மதுபானப் பரிசை மறுக்கிறேன், நான் ஒரு முஸ்லிம்" - பிரபல கால்பந்தாட்ட விரர் (வீடியோ இணைப்பு)

May 13, 2012 |

இங்கிலாந்தில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) எனப்படும் கால்பந்து போட்டி பட்டையைக் கிளப்புகிறது. இப்போட்டிகளில் கடந்த ஞாயிறுக்கிழமை நடந்தேறிய சம்பவம் சுவாரஸ்யமானது.

ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த யாயா டோரே (YAYA TOURE) என்னும் வீரர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கியப்போட்டியிலும் மான்செஸ்டர் சிட்டி வென்றதில்லை என்றபோதும் தற்போது யாயா டோரே போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்னும் ஒரே ஒரு ஆட்டத்தில் வென்று விட்டால் வெற்றிக் கோப்பை இந்த அணிக்குத்தான்.

இந்த அணியின் யாயா டோரே கால்பந்தாட்ட நாயகர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த நடுகள ஆட்டக்காரரான இவர் பந்தை தன்  கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட தூரம் லாவகமாக கடத்தச் செய்வதிலும், போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும் திறமை வாய்ந்தவர். 2011-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்  (African Footballer of the year) என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று தாக்குவதிலும் வல்லவர்.

கடந்த ஞாயிறுக்கிழமை நியூ காஸில் அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு முறை இலக்கெய்தி (கோல்களை போட்டு) வெற்றி தேடித்தந்தார் டோரே.

இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட அவருக்கு பெரிய ஷாம்பைன் (மதுபானம்) பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் டோரே.

இதற்கு அவர் கூறிய காரணம், "நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம் (I don't drink; because, I am a Muslim).

EPL நிர்வாகத்தாருக்கு யாயா டோரேயின் இந்தச் செய்கை சங்கடத்தைத் தந்தாலும், இம்மாதிரி நடக்கலாம் என்று முன்பே தாங்கள் யூகித்து பரிசை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்ததாக கூறி மேலும் பரபரப்பை உண்டாக்கினர். இருப்பினும், ஷாம்பைன், வீரர்களால் மிகவும் விரும்பப்படும் பரிசு என்பதால் அதனை மாற்ற வேண்டாம் என்று இறுதியில் முடிவெடுத்ததாகவும் தெரிவித்தனர்.

தாங்கள் எண்ணியது போலவே தற்போது நடந்துள்ளதால், எதிர்காலத்தில் பரிசுகளில் மாற்றம் கொண்டு வர நிர்வாகம் எண்ணியுள்ளனர். அதாவது, ஷாம்பைன் பாட்டிலுடன் பதக்க வில்லையும் சேர்த்து தர திட்டம் தீட்டியுள்ளனர். மது வேண்டாமென்னும் வீரர்களுக்கு பதக்கம் மட்டும் தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் சிட்டி அணியின் முக்கிய வீரர்கள் பலரும் முஸ்லிம்கள் என்பதால் அவர்களுக்கென தனி தொழுகை அறை வசதியை அந்த அணி நிர்வாகம் ஏற்படுத்தி தந்துள்ளதும் இங்கே குறிக்கத்தக்கது.inneram

1 கருத்துரைகள் :

sufsuf said...

நமது மண்ணின் மைந்தர், கிரிகெட் ஆடுவதற்கென தமது பெயரினையும் சமயத்தையும் மாற்றிகொள்ளும்போது டோரேவின் சமயப்பற்று போற்றத்தக்கது வாழ்த்துக்கள் வல்ல நாயன் அவருக்கு அருள்புரியட்டும்.

Post a Comment

Flag Counter

Free counters!