animated gif how to

களுத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

May 07, 2012 |


களுத்துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் இன்று திங்கட்கிழமை, மே, 7 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்ததாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டதிற்கு பௌத்த பாதுகாப்பு அமைப்பு மற்றும் தேசப்பற்று மிக்க பௌத்த சக்தி என்று குறிப்பிட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்பாட்டங்களில் வழமையாக கலந்து கொள்ளும் குறித்த பெளத்த தேரர்களே கலந்து கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.

குறித்த ஆர்பாட்டகாரர்கள் அனுராதபுர சியாரம் தாக்குதல், தெகிவளை , தம்புள்ளை மஸ்ஜித் தாக்குதல் ஆகியவற்றில் கலந்து கொண்டவர்கள் இன்று இடம்பெற்றுள்ள ஆர்பாட்டத்திலும் கலந்து கொண்டுள்ளனர்.  பழைய தலையணைகள் புதிய  உறைகளில்.







0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!