animated gif how to

85 தமிழ் மாணவர்களை கௌரவித்த கல்முனை முஸ்லிம்கள் - நல்லிணக்கததிற்கு ஓர் எடுத்துக்காட்டு

May 26, 2012 |


இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக சில தமிழ் ஊடகங்கள் திட்டமிட்ட இனவாதப் பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் நிலையில் கல்முனை முஸ்லிம்கள் கற்றல் செயற்பாட்டில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களை பாராட்டி கௌரவித்த அதிசய நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை (25) கல்முனையில் நடைபெற்றுள்ளது.

மொத்தமாக 275 மாணவர்கள் கௌரவிக்கப்பட்ட இந்நிகழ்வில் 85 தமிழ் மாணவர்களும் கௌரவிக்கப்பட்டது சமூக ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இந் நிகழ்வானது,

கல்முனை மாநகர பிரதேசத்திற்குட்பட்ட 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சா.தர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் மாநகர முத்துக்கள் நிகழ்வும் புத்தக வெளியீடும் வெள்ளிக்கிழமை (25) சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் கல்முனை மாநகர முதல்வர் ஸிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழவுக்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களும், கெளரவ அதிதிகளாக பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், பாராளுமன்ற உறுப்பினர்களான  எம்.ரீ.ஹசனலி, எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசீம் ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல்,கல்முனை மாநகர பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர், முன்னாள் மாநகர முதல்வர் செனட்டர் மசூர் மௌலானா ஆகியோர் உட்பட விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்களர்களும், அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கலந்து சிப்பித்தனர்.







2 கருத்துரைகள் :

sufsuf said...

நல்லிணக்கத்திக்கு எடுத்துக்காட்டு என்பதை விட தனி மனித அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சி என்றால் பொருத்தமானது, முடிந்தால் மு.கா.வும், த.தே.கூட்டணியும் எதிர்வரும் கிழக்கு மாகாண தேர்தலில் இணைந்து போட்டியிடட்டும்? நிச்சயம் மு.கா.வினர் அரசுடன் இணைந்து அனுபவிக்கும் சௌகரியங்களை இழப்பதற்கு விரும்பமாட்டார்கள். ஒப்பீட்டளவில் அரசுடன் இணைந்து சுகம் அனுபவிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்.எம்.பி.களின் பகுதியை விட தமிழ் பகுதிகளில் நடை பெற்றுவரும் வீதி அபிவிருத்திகளின் தரம் உயர்வாக உள்ளதை அப்பகுதிகளின் ஊடாக பயணம் செய்யும்போது அனுபவிக்கலாம்.

Anonymous said...

மாநகர முத்துக்களை மூலதனமாக கொண்டு மாநகர முதல்வரின் மலினமான அரசியல் முன்னெடுப்பு,கல்வி உயர் அதிகாரிகள் நிகழ்வில் இல்லை,மேயேருக்கு கூஜா தூக்கும் அதிபர்கள் சிலர் அரங்கில், மேடையிலோ மு.கா.தலைவர்,பிரதி அமைச்சர் பசீர் மற்றும் மு.கா.பாராளுமன்ற உறுப்பினர்களும்,மாநகர உறுப்பினர்களும் தான் கல்வியலாலருக்கோ இடமில்லை.வயது வந்த உயர் வகுப்பு மகுமூத் மகளீர் பாடசாலை மாணவிகளை கொண்டு நடுநிசி 12 மணிவரை தட்டுகளின் பதக்கங்களையும் நினைவு சின்னங்களையும் ஏந்தி வரும் இழிநிலை,சினிமா இசையில் அந்நிய நடனம், 100 வீதம் முஸ்லிம்கள் வாழும் சாய்ந் தமருதூருக்கு தேவைதானா இந்த அவமானம் ? முஸ்லிம்களின் உரிமை,பண்பாடு பாதுகாக்க உருவாக்கப்பட்ட கட்சியின் தலைமை இதற்க்கு சாமரம் வீசுகிறது, நீதி அமைச்சரே நீதியை வழங்க அரசு மறுத்தாலும், நீங்கள் எங்கள் பண்பாட்டிக்கு வேட்டு வைக்க உங்கள் அரசியல் காவடியை தூக்கதீர்கள், 45 நாள் அரசியல் பிரவேச வெற்றி மதியை மயக்கிவிட்டதினால் மு.கா.தலைவரும்.தவிசாளரும் இப்படியான தமாசாக்களை ஆதரிக்கார்களா? பிரதி அமைச்சர் பசீர் பேசும்போது மாநகர முத்து ஒன்றின் தகப்பன் குறுக்கிட்டு பிற்பகல் 3 மணியிலிருந்து காத்து நிற்பதாக சொன்னதும் (இரவு சுமார் 10 மணி ) அவர் சுதாகரித்து பேச்சினை முடிக்க மாநகர முத்துகளை கௌரவிப்பது சற்று துரிதமாகியது,இவ்விடத்தில் அந்த துடிப்பான தகப்பனுக்கு சபாஸ், பொதுவில் இந் நிகழ்வு வரி இறுப்பாலரின் நிதி சேர்ந்த ஒரு தனி மனித புகழ் (மேயர்) பாடும் நிகழ்வு என்றால் மிகை இல்லை.

Post a Comment

Flag Counter

Free counters!