animated gif how to

KFC சிக்கனால் சிறுமியின்‌ மூளை பாதிப்பு; 8 மில்லியன் டொலர் நட்டஈடு (படம் இணைப்பு)

April 28, 2012 |

பிரபல KFC சிக்கன் சாப்பிட்டதால் மூளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு KFC நிறுவனம் 8 மில்லியன் டொலர் நட்டஈடு வழங்க வேண்டும் என அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், உடனடியாக இந்த சிறுமி ஒரு டொலைரைக்கூட கண்ணால் காணப்போவதில்லை. காரணம், KFC இந்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.

2005ஆம் ஆண்டு, 7 வயதான மோனிகா சமான், தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் சிட்னி புறநகரப் பகுதி வில்லாவூடில் உள்ள KFC உணவகத்தில் சிக்கன் ட்டுவிஸ்டர் சாப்பிட்டார். சிறிது நேரத்தில் முழு குடும்பமும் வாந்தி எடுக்கத் தொடங்கினார்கள். மற்றையவர்களின் பாதிப்பு அத்துடன் நின்றுவிட, மோனிகாவின் உடல்நிலை மேலும் பாதிப்புக்கு உள்ளானது.
 
வைத்தியசாலையில் சோதனை செய்யப்பட்டபோது, மோனிகா சாப்பிட்ட சிக்கனில் இருந்த சல்மொனெலா விஷம் (salmonella poison), அவரது மூளையை பாதித்துவிட்டது தெரியவந்தது. தற்போது 14 வயதாகும் மோனிகாவால் நடக்க முடியாது. வீல்சேரில் உள்ள அவரால் பேசவும் முடியாது. மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சொந்தமாக இயங்க முடியாது.

KFC நிறுவனத்தின் மீது, மோனிகாவின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில், நீண்டகால விசாரணை மற்றும் ஏராளமான மருத்துவக் குறிப்புகளை ஆராய்ந்த பின்னர், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 8 மில்லியன் டொலர் இழப்பீட்டை கொடுக்க மறுத்துள்ள KFC நிறுவனம், நீதிபதி ஸ்டீபன் ரொத்மேனின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வதற்கு மனுத்தாக்கல் செய்துள்ளது.
 பாதிக்கப்ட்ட சிறுமி

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!