animated gif how to

பிரதமர் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் மட்டும் கலந்துரையாடி அறிவிப்பு விடுத்தாரா?

April 22, 2012 |

தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக் கிழமை உத்தரவிட்டுள்ளார்.என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது இன்று காலை பிரதமர் டி.எம்.ஜயரட்ன தலைமயில் ஒரு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது அதன் பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த கோட்டத்தில் சில முஸ்லிம் அரசியல் வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. (இது சின்ன பிரச்சினை என்று தெரிவித்து வரும் ஒரு பிரதியமைச்சரும் கலந்து கொண்டதாக அறியமுடிகிறது).

அவர்கள் அங்கு என்ன பேசினார்கள் என்பதை அறிய முடியவில்லை என்பதுடன்  தற்போது   தம்புள்ள பகுதியில் குறித்த மஸ்ஜித் தொடர்பாக  தம்புள்ள பிரதேச முஸ்லிம்கள் சிலர் கலந்து கொள்ளும் கூட்டம் ஒன்று இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது .
தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா தாக்கப்பட்டமைக்கு பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்கான நேற்று மாலை கொழும்பு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா தொடர்பான விடயங்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழிநடத்தும் என்றும் தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் அங்கு  மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக ஜானாதிபதி மற்றும் ,பிரதமரை சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டது இந்த நிலையில் சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மட்டும் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் வெளிவந்துள்ளதா ?
இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நாம் அணுகியபோதும் அவர் நேற்று இரவு கட்டார் பயனமாகியுள்ளதால் அவரை உடனடியாக தொடர்பு கொள்ளமுடியவில்லை.
-Lankamuslim-

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!