animated gif how to

தம்புள்ளயில் நூற்றுக்கும் மேற்பட்ட விபச்சாரிகள்- பள்ளியை அகற்றுவதை விட அதுவே அனாச்‌சாரம்!

April 24, 2012 |

தம்புள்ள பள்ளிவாசல் சட்டவிரோதமானது என்று உயர் பதவி வகிப்போர் எப்படிக் கூறமுடியும். அப்படி அவர்கள் அறிவித்திருந்தால் அதனை மீளப்பெற்றுக் கொள்ளவேண்டும். புனித பிரதேசம் என்றால் ஒரு சமயத்திற்கு மட்டும் புனிதபிரதேசமாக முடியாது. 


அது எல்லோருக்கும்தான் புனித பிரதேசம் என்று மத்திய மாகாண சபை அங்கத்தவர் செய்னுல் ஆப்தீன் லாபிர் தெரிவித்தார். நேற்று புதன்கிழமை கட்டுகாஸ்தோட்டை ரிவர்சைட்மண்டபத்தில் மத்திய மாகாண முஸ்லிம் அஸம்பிலி ஒழுங்கு செய்த ஊடக சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

இப்பள்ளிவாசல் சட்டவிரோத கட்டிடம் என்றும் தற்போது கட்டப்பட்டுக்கொண்டு வருவதாகவும் பிழையான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. சுமார் 65-70 வருடங்களுக்கு மேலாக இந்திய வர்த்தகர்களால் அமைக்கப்பட்ட பள்ளிவாசல். இதற்கு காணி உறுதி உட்பட ஏனைய ஆவணங்கள் உண்டு. நிலைமை இப்படி இருக்க இது சட்டவிரோதமானது என்று உயர் பதவி வகிப் போர் எப்படிக் கூறமுடியும். அப்படி அவர்கள் அறிவித்திருந்தால் அதனை மீளப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

புனித பிரதேசம் என்றால் ஒரு சமயத்திற்கு மட்டும் புனிதப் பிரதேசமாக முடியாது. தம்புள்ளையில் 25இற்கும் மேற்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள் உள்ளன. அங்கு அனைத்து அனாச்சாரங்களும் நடக்கின்றன. மதுவிற்பனை நிலையங்களும் உண்டு. நூற்றுக்கு மேற்பட்ட விபச்சாரிகள் தெருவழியே உள்ளனர். வெளியூரில் இருந்து வரும் லொரிச் சாரதிகளையும் ஏனைய வர்த்தகர்களையும் திருப்திப்படுத்தும் அவர்கள் முச்சக்கரவண்டிகளில் வாடிக்கையாளர்களால் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

ஆனால், பள்ளிவாசலில் அப்படியான அனாச்சாரம் ஏதும் நடப்பதில்லை. எனவே இப்படியான அனாச்சாரங்களைத்தான் ஒழிக்கவேண்டுமே ஒழிய, பள்ளிவாசலை அல்ல. ரங்கிரி எப்.எம்.என்ற வானொலிச் சேவை மூலம் தனித் துவேசக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இது தேசிய ஐக்கியத்திற்கு பாதகம் ஏற்பம் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

கண்டி மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்ததாவது, 1981ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புனித பூமி சட்டமூலத்தில் புனித பூமி எல்லையில் ஏனைய சமய நிறுவனங்கள் இருக்கக் கூடாது என்று கூறப்படவில்லை. எனவே புனித பிரதேசம் என்று காரணம் காட்டி அதனை அகற்றமுடியாது. மேற்படி நொண்டிக் காரணம்கூறி கடந்த வெள்ளிக்கிழமை (20.4.2012) அங்குள்ள முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையையும் நிறைவேற்ற இடமளிக்காது மேற்கொண்ட சம்பவங்கள் தமக்குப் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்துயள்ளது.

எமது நாட்டின் அரசியல் அமைப்பின் படி சகல மக்களுக்கும் தமது சமய வழிபாடுகளை சுதந்திரமாக நடாத்த உரிமை உண்டு. இருப்பினும் அது ஏடுகளுக்கு மட்டும் எல்லைப் படுத்தப்பட்டுள்ளது என்பதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. இன, மத, மொழி பேதமற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் நாட்டுப்பற்று ஏற்பட வேண்டும் எனப் பாடுபடும் இவ்வேளையில் இவ்வாறான சம்பவங்கள் எமது மனதை பெரிதும் புண் படுத்துகின்றன.

அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் மீறல் சம்பந்தமான பிரேரனையின் போது எமது நாட்டு முஸ்லிம்கள் தமது அனைத்து வேறுபாடுகளையும் மறந்து எமது நாடு அவமானப்படக் கூடாது என்ற ஒரேநோக்குடன் பாரிய முயற்சிகளை மேற்கொண்டனர். உள்ளூரில் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியது மட்டுமல்லாமல் இலங்களையில் முஸ்லிம்கள் மத்தியில் மிகச் சக்தியும் செல்வாக்கும் பெற்ற அமைப்பான ஜம்மியத்துல் உலமா போன்ற இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் பெரியார்கள், முஸ்லிம் அமைச்சர்கள் உலமாக்கள், போன்றோர் ஜெனீவா சென்று நாட்டுக்காக பாடுபட்டனர். இங்குள்ள நிலையை உலகத் தலைவர்களுக்குத் தெளிவுபடுத்தினர்.

அதேபோன்று எமது நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் முஸ்லிம் நாடுகளே மிகக் கூடுதலான நாடுகளாகும். அவ்வாறு இருந்தும் முஸ்லீம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள இத்துயர நிலை மிகப் பரிதாபகரமானது. எனவே, அரசு மேற்படி விடயங்களை கருத்திற் கொண்டு நியாயமான தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு என்றார்.

மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஏ.எச்.எம்.இப்றாஹீம் தெரிவித்ததாவது, கடந்த 20ஆம் திகதி சம்பவம் நடந்த இடத்தில் நான் இருந்தேன். ஜூம்ஆ தொழுகைக் காண ஆயத்தங்களை மேற்கொண்டிருந்த வேளை சட்டவிரோதமாகப் பிரவேசித்த பௌத்த மதகுருமார்கள் பள்ளியை விட்டு எம்மை வெளியேறும்படி ஆவேசமாகக் கூறினர். மிக அவலட்சணமாக நடந்து கொண்டனர். வெளியேற நாம் மறுத்தோம்.

நாம் சுமார் 50 பேர் அளவில் அங்கிருந்தோம். குறைந்தது ஜூம்ஆ தொழுகை நடத்த 40 பேர் இருக்கவேண்டும் என்பதனால் நாம் அவ்வாறு அங்கு தரித்து நின்றோம். எமது ஜனாஸாக்களையே வெளியேற்ற வேண்டிவரும் நாம் வெளியேற மாட்டோம் எனக்கூறினோம். பின்னர் பொலிஸார் தலையிட்டு எம்மை வெளியேறும்படியும் எமக்கு அடைக்கலம் தருவதாகவும் பள்ளி உடைக்காது பாதுகாப்புத் தருவதாகவும் தெரிவித்தனர்.

அதனை அடுத்து நாம் வெளியேறி அயலில் உள்ள சிங்கள வீடுகளுக்குச் சென்றோம். அவர்கள் எமக்கு தேநீர் வழங்கி நன்கு உபசரித்தனர். ஒரு சில உள்ளூர் வாசிகளைத்தவிர ஏனையோர் அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள் என அவர்கள் தெரிவித்தது மட்டுமல்லாது, ‘இப்பள்ளியால் எமக்கு எது வித பாதிப்பும் இல்லை. இது எமது மூதாதையர் காலம் முதல் உள்ளவைஎன அச்சிங்கள மக்கள் கூறினர்.

அங்கு ஒரு சிங்களப் பெண்மணி பின்வருமாறு தெரிவித்தார். இப்பகுதி கிராமத்தலைவர் (ஆராச்சியார்) எனது தந்தையாகும். அவர்காலம் முதல் இப்பள்ளி இருக்கிறது. இது அக்காலத்தில் கட்டப்பட்டதுஎனத் தெரிவித்ததாக அவர் கூறினார். முத்திய மாகாண சபை அங்கத்தவர் எஸ்.எம்.எஸ். சூபி உட்பட இன்னும் பலர் இங்கு உரையாற்றினர்.

1 கருத்துரைகள் :

Anonymous said...

we are getting true stories from your site.and we share this news via facebook & other social networks to our friends to know about the news but only thing tamil known people only can understand it, if you can publish it in Singhala/English then all people can understand the right situation.

Post a Comment

Flag Counter

Free counters!