தம்புள்ளயிலுள்ள பள்ளிவாயல் ஆறு மாத
காலத்திற்குள் அகற்றப்படல் வேண்டுமென இன்று தம்புள்ளையில் நடைபெற்ற கூட்டத்தில்
தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று தம்புள்ள
பள்ளிவாயல் விவகாரம் தொடர்பான உயர் மட்டக் கூட்டமொன்று தம்புள்ள பிரதேச செயலக
கட்டிடத்தில் நடைபெற்ற போது இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில்
புத்தசாசன அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்ட தேரோக்கள் கலந்து
கொண்ட போதிலும் இக் கூட்டத்தில் எந்த முஸ்லிம் முக்கியஸ்த்ர்களோ பள்ளிவாயல் நிருவாகிகளோ கலந்து
கொள்ளவில்லையெனவும் தெரிய வருகின்றது.
தம்புள்ளையில்
புனித பிரதேச மெனக் கூறப்படும் இடத்திற்குள் 72 சட்டவிரோத கட்டிடங்கள் இருப்பதால் அதை
அகற்றிவிடுவதென இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த 72 கட்டிடங்களுக்குள் தம்புள்ள ஜும்ஆ
பள்ளிவாயல் மற்றும் தம்புள்ள இந்து காளிகோயில் என்பனவும் வருவதாகவும் இதை
உடைக்கவேண்டுமெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில்
ரங்கிரிய பௌத்த விகாரையின் விகாராதிபதி உட்பட பல தேரோக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
0 கருத்துரைகள் :
Post a Comment