தற்போது கிடைக்கபெற்ற தகவல்களின்படி, தம்புள்ள ஜும்ஆ பள்ளிவாயல்
பேரினவாத சக்திகளால் உடைக்கப்பட்டுள்ளது. முதலில் பள்ளிவாயலில் உள்ளே இருந்த
முஸ்லிம் சகோதரர்கள் பொலிசாரின் வற்புறுத்தலின் காரணமாக வெளியேற்றப்பட்டனர்.
அங்கே ஜும்ஆ நடைபெறவில்லை.
பின்னர் பொலிசார் மற்றும்
இராணுவத்தினர் முன்னிலையில் காவி உடை அணிந்தவர்கள் பள்ளியின் உள்ளே சென்று அங்கே
இருந்த சகல பொருட்களையும் உடைத்து அளித்தனர்.அத்தோடு பள்ளியையும் உடைத்து
அளித்துள்ளதாக அங்கே இருந்து எமது சகோதரர் கண்ணீருடன் தெரிவித்தார்.
அரசில் ஒட்டியுள்ள முஸ்லிம்
அமைச்சர்களுக்கு பல்வேறு தகவல்கள் இது தொடர்பாக தெரிவிக்கப் பட்டபோதும், அவர்களால் எந்த
விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
0 கருத்துரைகள் :
Post a Comment