animated gif how to

தாலிபான் தலைவர் ஸஈஃப் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தஞ்சம்!

April 13, 2012 |

தாலிபான் ஆட்சிகாலத்தில் பாகிஸ்தான் தூதராக பதவி வகித்த அப்துஸ் ஸலாம் ஸஈஃப் பாதுகாப்பு காரணங்களால் ஐக்கிய அரபு இராச்சியத்தில்(U.A.E) தஞ்சம் புகுந்துள்ளார்.

அமெரிக்க ராணுவம் கொலைச் செய்யலாம் என்ற சந்தேகத்தை தொடர்ந்து அவர் யு.ஏ.இயில் அபயம் தேடியுள்ளார். சோதனை என்ற பெயரால் காபூலில் அவருடைய வீட்டிற்கு அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவம் இரண்டு முறை நுழைந்திருந்தது. ஆனால், ஆப்கான் ராணுவம், அமெரிக்காவின் முயற்சியை தோல்வியடையச் செய்ததாக செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்க ராணுவத்தின் சதித்திட்டத்தை ஆப்கான் அரசும் உறுதிச் செய்துள்ளது. போதுமான படையினரை அனுப்பி அமெரிக்க ராணுவத்தின் சதியை முறியடித்ததாக அதிகாரப்பூர்வ ஆப்கான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கான் ஆக்கிரமிப்பை தொடர்ந்து ஸஈஃப் கைது செய்யப்பட்டு குவாண்டானாமோ சித்திரவதை கூடத்தில் அடைக்கப்பட்டார். நான்கு வருட சிறை வாழ்விற்கு பிறகு விடுதலையான ஸஈஃபை அமெரிக்கா முழுமையாக கண்காணித்து வந்தது.

குவாண்டனாமோவில் இருந்து விடுவிக்கப்பட்ட தாலிபான் தலைவர்களை ஒவ்வொருவராக அமெரிக்க ராணுவம் கொலைச் செய்து வருவது ஸஈஃபிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

குவாண்டானாமோவில் சிறை வாழ்வு குறித்து ஸஈஃப் எழுதிய அனுபவ கட்டுரைகள் அமெரிக்காவிற்கு கோபத்தை கிளப்பியது. சிறையில் நிகழும் கொடூரமான சித்திரவதைகளை குறித்து ஸஈஃப் அதில் விவரிக்கிறார். அமெரிக்காவே முன்வந்து தாலிபானுடன் துவக்கிய பேச்சுவார்த்தையில் ஸஈஃப் முக்கிய பங்கினை வகித்தார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!