animated gif how to

இந்த நாட்டு முஸ்லிம்களை நான் பாராட்டுகிறேன்-அமைச்சர் விமல் வீரவன்ஸ!

March 23, 2012 |

ஜெனீவாவில் அமெரிக்கா பெற்ற வெற்றியை அமுல்படுத்த இலங்கை மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாண பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொது கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

‘”ஜெனீவாவில் வாக்களிப்பு முடிந்து விட்டது. ஆனால் இது இலங்கையில் நடக்கும் ஒரு சாதாரண தேர்தலல்ல. அது உலகில் மிகச் சிறிய நாடான எமது இலங்கையை எதிர்த்து உலகிலே மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா பெற்ற வாக்கு விகிதம் ஒப்பீட்டளவில் மிக குறைந்ததேயாகும்.
எமது நாட்டிலே பலர் மது விற்பனைக்கான அனுமதி பத்திரத்தை பெற்றுள்ள போதும் அவர்கள் விரும்பிய இடங்களில் மது விற்பனை கடைகளைத் திறக்க  பொதுமக்கள் அனுமதிப்பதில்லை.
அதுபோல் இன்று அமெரிக்கா உட்பட மேற்குலம்  ஜெனீவாவில் பெற்ற அனுமதி பத்திரத்தை அமுல்படுத்த இலங்கை மக்களான நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். உலகிற்கே பயங்கரவாதத்தை கொண்டு சென்ற  விடுதலை புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் ஒரு நடவடிக்கையையே இன்று அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
அன்று ஒரு பிரபாகரனை உருவாக்கியது போல் அடுத்து ஒரு உருத்திரகுமாரனை உருவாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் தான் இது.
மூன்று தசாப்த காலம் நாம் இழந்திருந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றுத்தந்த எமது யுத்த வீரர்களை உலக நீதிமன்றத்தின் முன்நிறுத்த இந்நாட்டு மக்கள் அனுமதிக்க போவதில்லை.
அதேபோல் இது கால வரை பயந்து பயந்து யுத்தம் செய்த நாட்டு தலைவர்களையும் விட தைரியமாக முன்னின்று நாட்டில் இரண்டாவது சுதந்திரத்தை பெற்றுத் தந்த தலைவரை ஏகாதிபதியவாதிகள் முன் கைக்கட்டி நிற்க அனுமதிப்பதா? இவை இரண்டையும் எம் நாட்டு மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
அமெரிக்காவின் தீர்மானம் நாட்டுக்கெதிரானதல்ல. அது அரசாங்கத்திறகு எதிரானது என்று சிலர் கூறுவது போல அரசும் நாடும் வேறல்ல. இவை இரண்டும்; ஒன்றே.
எனவே இது எம் மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு விடயம். சிறிய நாடான கியூபாவால் அமெரிக்காவை எதிர்த்து வாழ முடியுமாயின் ஏன் எம்மால் முடியாது?
இந்த நாட்டு முஸ்லிம்களை நான் பாராட்டுகிறேன். நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்பட்ட போது, முழு முஸ்லிம் சமூகமும் ஒரு தலைப்பட்ச கருத்தில் எதுவித சலனமுமின்ற அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிர்பபு தெரிவித்தனர்” என்றார்.
நன்றி-தமிழ் மிரர்

5 கருத்துரைகள் :

rijan said...
This comment has been removed by the author.
rahman said...

ඔබ අවදියෙන් ද? මා සිතුවේ ඔබ හදස්සියේනම ඉන්දියාවටවත් ගියා කියලා බොහෝම පිං හෙදායි

Anonymous said...

Whole the places are holy places for all people of Sri Lanka.

The first priority is for our country and country Man, we are the large second generation in the world and shortly we may be the first. " If God wish"

jaweel said...

அந்த முஸ்லிம் மக்களுக்கு இந்த அரசாங்கம் செய்கிற நன்றி விசுவாசம் இலங்கையுள்ள பள்ளிவாசலை அகற்றுவது why this kolavery

Anonymous said...

same comment for me also, mr jaweel

Post a Comment

Flag Counter

Free counters!