animated gif how to

நாஸாவில் டார்வின் கொள்கையை எதிர்த்த விஞ்ஞானியின் வேலை பறிபோனது!

March 17, 2012 |


டார்வின் கொள்கையையும், பரிணாம வாதத்தையும் எதிர்த்து படைப்பாற்றல் கொள்கையை குறித்த தனது கருத்துக்களை சக பணியாளர்களுடன் பகிர்ந்துகொண்ட விஞ்ஞானி நாஸாவில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாஸாவின் சனிக்கிரகத்தை குறித்த ஆராய்ச்சி திட்டமான கஸ்ஸினியின்(Cassini) முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவரான டேவிட் கோபெட்ஜ்(David Coppedge) என்பவரை நாஸா வெளியேற்றியுள்ளது.

2009-ஆம் ஆண்டு கஸ்ஸினியின் தலைமை பதவியில் இருந்து கோபெட்ஜ் நீக்கப்பட்டிருந்தார். இதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், சக பணியாளர்களின் மத உணர்வை காயப்படுத்தும் விதமாக செயல்பட்டார் என்று நாஸா அதிகாரிகள் நீதிமன்றத்தில் பதில் வாதத்தை முன்வைத்தனர். நேற்று முன்தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்தபொழுது உண்மை நிலவரம் வெளியானது.
டார்வினின் பரிணாம கொள்கைக்கு எதிராக படைப்புக் கொள்கை வாதிகள் எடுத்துக்காட்டும் இண்டலிஜன்ஸ் டிசைன் சித்தாந்தத்தின் பிரதிநிதியான கோபெட்ஜ் இதுத்தொடர்பான கருத்துக்களை தனது சக பணியாளர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
பிரபஞ்சம், அதில் உள்ள உயிரினங்கள் மற்றும் படைப்புகளின் உருவாக்கத்தின் ஆகியவற்றின் பின்னணியில் ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி உண்டு என்ற வாதம் தான் இண்டலிஜன்ஸ் டிசைன் என்பது. இதனைக் குறித்து விளக்கும் சில டி.வி.டிகளை அவர் விநியோகித்துள்ளார். இதனைத்தான் நாஸா அதிகாரிகள் தவறாக சித்தரித்துள்ளனர். முன்பும் இதைப்போன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளன. இதனை டிஸ்கவரி இன்ஸ்ட்யூட் செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் கல்சர் அசோசியேட் இயக்குநர் ஜான் வெஸ்ட் கூறியுள்ளார்.
டார்வின் கொள்கைக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வெளிப்படையான போர் நடப்பதாக ஜான் வெஸ்ட் கூறுகிறார். முன்பு டார்வின் கொள்கையை பாடத் திட்டத்தில் சேர்த்ததற்கு படைப்பு கொள்கை வாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!