மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டதை தொடர்ந்து ஒரு வீதி ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஒரு வர்த்தக நிலையத்தில் மறைந்திருந்த அவரும் அவரின் ஆதரவாளர்களும் இராணுவத்தால் இழுத்து செல்லப்பட்ட நஷீட்டை பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மொஹமட் நஷீட் மீதும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை மொஹமட் நஷீட்க்கு எதிராக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. என்றாலும் அவர் கைது செய்யப்படமாட்டாரென புதிய ஜனாதிபதியின் பேச்சாளர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. மற்றுமொரு தகவலில் படி மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தற்காலிகமாக இரத்துசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றது.
மொஹமட் நஷீட் மாற்றும் அவரின் முக்கிய ஆதரவாளர்கள் மிக கடுமையாக தாக்கப்பட்டதாக டிவிட்டர் மற்றும் முகப்பு நூல் பக்கங்களில் அவரின் ஆதரவாளர்கள் தகவல் வெளியிட்டு வருகின்றனர்
ஒரு வர்த்தக நிலையத்தில் மறைந்திருந்த அவரும் அவரின் ஆதரவாளர்களும் இராணுவத்தால் இழுத்து செல்லப்படும் காட்சிகள் :
0 கருத்துரைகள் :
Post a Comment