animated gif how to

“இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி முறைமை: கோட்பாடும் அமுலாக்கமும்”

February 03, 2012 |


ராபிதா நளீமிய்யீன்” ஜாமியாஹ் நளீமிய்யாஹ் பழைய மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் பெப்ருவரி 18 -19 ஆகிய தினங்களில் “இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி முறைமை: கோட்பாடும் அமுலாக்கமும்” என்ற கருப் பொருளில் இரண்டு நாள் வதிவிட செயலமர்வு ஒன்று இடம் பெறவுள்ளது.

ஜாமியாஹ் நளீமிய்யாஹ் பழைய மாணவர்களுக்கு மாத்திரம் மட்டுப் படுத்தப் பட்டுள்ள மேற்படி வதிவிட செயலமர்வு ஜாமியாஹ் நளீமிய்யாஹ் வளாகத்தில் அமைந்துள்ள கல்வி மற்றும் அபிவிருத்தி பயிர்ச்சிகளுக்கான ஆய்வு நிலையத்தில் நடைபெறவுள்ளது.

பாரம்பரிய வங்கிகளின் தொழிற்பாடுகள், இஸ்லாமிய வங்கிகளின் தோற்றமும் வளர்ச்சியும், இஸ்லாமிய வங்கிகளின் தொழிற்பாடுகளும் சேவைகளும், ஆதன மற்றும் பங்கு வர்த்தக மூலதன தொழிற்பாடுகள், இஸ்லாமிய கூட்டுறவு, நுண்ணிதியியல், இஸ்லாமிய காப்புறுதி, இஸ்லாமிய வங்கிச்சேவைகளும் இறைவரிச் சட்டங்களும், இஸ்லாமிய வங்கித் தொழிற்பாடுகளை மேற்பார்வை செய்கின்ற தகுதிவாய்ந்த அதிகார சபை மற்றும் ஷாரீ ஆ ஆலோசனை சபைகளின் தொழிற்பாடுகள், இஸ்லாமிய நிதியியல்; சந்தர்ப்பங்களும் சவால்களும் என பல்வேறு தலைப்புகளில் விரிவுரைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளது.

ஜாமியாஹ் நளீமிய்யஹ்வின் பணிப்பாளர் கலாநிதி எம்.எ.எம் ஷுக்ரி, தென்கிழக்குப் பல்கலைக் கழக பொருளியல் பீட தலைவர் கே.எம்.எம்.பாளீளுள் ஹக், மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் உஸ்தாத் எம் எ.எம் மன்ஸூர், ஜாமியாஹ் நளீமிய்யாஹ் சிரேஷ்ட விரிவுரையாளர் சி.அய்யூப் அலி, தென்கிழக்கு பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முஹம்மது நபீஸ், உள்நாட்டு இறைவரித் திணைக்கள பிரதி ஆணையாளர் அஷ் ஷேய்க் என் எம். முப்லிஹ், ஜாமியாஹ் நளீமிய்யாஹ் பிரதிப் பணிப்பாளர் எ.சி. ஆகார் முஹம்மது, இஸ்லாமிய வங்கியியல் விரிவுரையாளர் முஹம்மது மிஹ்ளார் உற்பட பல்வேறு இஸ்லாமிய வங்கியியல் நிபுணர்களும் இந்த செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

தற்போது இலங்கையில் இஸ்லாமிய நிதியியல் மற்றும் ஷாரீஆ நிபுணர்களுக்கான தேவை அதிகரித்துக் காணப் படுவதாலும், சர்வதேச அளவில் இஸ்லாமிய வங்கிமுறைமை கண்டு வரும் வளர்ச்சி, இஸ்லாம் அல்லாத சூழலில் இஸ்லாமிய வங்கி முறைமை எதிர் கொள்ளுகின்ற சந்தர்ப்பங்கள் மற்றும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் என பல்வேறு இலக்குகளை கருத்தில் எடுத்து இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலமர்வு திட்டமிடப் ட்டுள்ளது. ஜாமியஹ்வின் பழைய மாணவர்கள் என்ற வகையில் அவர்களது ஷா ரீ ஆ கற்கைகளுக்கு மதிப் பளித்து இந்த செயலமர்வின் முடிவில் ஒரு தகைமைச் சான்றிதழும் வழங்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த செயலமர்வைத் தொடர்ந்து அரபு இஸ்லாமிய கலாபீடங்களின் மாணவர்கள், வர்த்தக, பொருளாதார, முகாமைத்துவ, கணக்கியல் மாணவர்களுக்கான செயலமர்வொன்றை கொழும்பில் நடாத்தவும் “ராபிதா நளீமிய்யீன் ” திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்ட செயலமர்வில் பங்கு பற்ற விரும்பும் மாணவர்கள், பட்டதாரிகள், அஷ்-ஷேய்க் முஹம்மத் ரிஸ்வான், இணைப்பதிகாரி, ராபிதா நளீமிய்யீன், ஜாமியாஹ் நளீமிய்யாஹ், சீனான் கோட்டை, பேருவளை என்ற முகவரிக்கு தங்கள் விபரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!