animated gif how to

எகிப்தில் மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி

January 09, 2012 |

OurUmmah: எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தலிலும் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் இஹ்வானுல் முஸ்லிமீன் மற்றும்அன் நூர் கட்சி ஆகியன 62.2.வீதமான வாக்குகளை பெற்றுள்ளது என்று எகிப்தின்  தேர்தல் திணைக்களம் தெரிவிக்கின்றது . இது தவிர மற்றுமொரு இஸ்லாமிய கட்சியான அல் வசத் என்ற கட்சி 2 வீதமான வாக்குகளை கைப்பற்றியுள்ளது.

இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகளின் படி போட்டியிட்ட ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் அதி கூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அதேவேளை ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான அன் நூர் கட்சி ஒன்பது மாகாணங்களில் இரண்டு மாகாணங்களில் அதி கூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
எகிப்து லிபிரல் கட்சி இது வரை 9 வீதமான வாக்குகளையும், மற்றுமொரு கட்சியான வப்த் கட்சி 9 வீதமான வாக்குகளையும் , ஹுஸ்னி முபாரக்கின் ஆதரவாளர்கள் கட்சி 4 வீதமான வாக்குகளையும், சுயேற்சை வேட்பாளர்கள் 2 வீதமான வாக்குகளையும் பெற்றுள்ளனர் , எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்று கட்டங்களையும் உள்ளடக்கிய இறுதி உத்தியோகபூர்வ முடிவுகள் ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!