தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் சேவை நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நெடுஞ்சாலையில் முதலாவது பஸ் காலியிலிருந்து மஹரகம நோக்கி நாளை காலை புறப்படும் எனவும் இரண்டாவது பஸ் கொட்டாவையிலிருந்து காலி நோக்கி புறப்படும் எனவும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைவர் எம்.டி. பந்துசேன தெரிவித்தார்.
பொதுவாக காலி- கொட்டாவ பஸ் பயணத்திற்கு மூன்றரை மணித்தியாலங்கள் செல்லும் எனவும் ஆனால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இப்பயணத்திற்கு ஒரு மணித்தியாலமே செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நெடுஞ்சாலைக்கு வெளியிலுள்ள கொட்டாவ-மஹரகமவுக்கு இடையிலான பகுதியைத் தவிர, இந்நெடுஞ்சாலையில் எங்கும் இந்த பஸ் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அவர் கூறினார்.
மஹரகமவிலிருந்து காலிக்கான பஸ் கட்டணம் 400 ரூபாவாகும். அதேவேளை காலியிலிருந்து கொட்டாவை வரையான பஸ் கட்டணம் 380 ரூபாவாகும். இரு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை இந்த பஸ் சேவை நடத்தப்படும்.
இந்த பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு பலர் கோரிக்கை விடுத்த நிலையில், இதற்கு அதிக கேள்வி இருக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துரைகள் :
Post a Comment