உள்ளங்களில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியுமெனவும் பிள்ளைகளின் உள்ளங் களில் நல்ல கருத்துக்கள் விதைக்கப்பட வேண்டுமெனவும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார்.
மனங்களில் அமைதி நிலவினால் வீட்டில் சந்தோசம் வரும். அது நாட்டுக்கு சந்தோசத்தைத் தரும். அதன் மூலம் உலகத்தில் மகிழ்ச்சி தோன்றும். நாங்கள் யாரையும் பழிவாங்க நினைக்கக் கூடாது. தீமைகள் செய்தவரையும் மன்னிக்கும் மனப்பாங்கு நமக்கு வரவேண்டும்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற மும்மொழி தொடர்பான விசேட நிகழ்வொன்றில் அவர் பங்கேற்றிருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
மனங்களில் அமைதி நிலவினால் வீட்டில் சந்தோசம் வரும். அது நாட்டுக்கு சந்தோசத்தைத் தரும். அதன் மூலம் உலகத்தில் மகிழ்ச்சி தோன்றும். நாங்கள் யாரையும் பழிவாங்க நினைக்கக் கூடாது. தீமைகள் செய்தவரையும் மன்னிக்கும் மனப்பாங்கு நமக்கு வரவேண்டும்.
இவ்வாறு கூறிய அவர், திருக்குறளில் குறள் ஒன்றையும் எடுத்துக் காட்டினார். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற திருக்குறளின் அடியொன்றை நினைவூட்டிய அப்துல் கலாம் மும்மொழிகளிலும் பேசினார்.
ஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் என்று தனது உரையை ஆரம்பித்த அவர் சுமார் அரை மணிநேரம் பேசினார்.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். ஜனாதி பதியின் செயலாளர் லலித் வீரதுங்க வரவேற்புரை நிகழ்த்தினார். சிங்கள மாணவர் ஒருவர் தமிழிலும் தமிழ் மாணவர் ஒருவர் சிங்களத்திலும் முஸ்லிம் மாணவர் ஒருவர் ஆங்கிலத்திலும் உரையாற்றி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றனர்.
இந்த நிகழ்வின் பின்னர் மாணவர்களுடன் தாம் புகைப்படம் எடுக்கப் போவதாகக் கூறிய அப்துல் கலாம் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் உரைபெயர்ப்பாளர் ராகுலனின் கையைப் பிடித்துக் கொண்ட அவர், அவரது நேர்த்தியான தமிழைப் பாராட்டினார். யாழ்ப்பாணத்தில் தாம் தமிழில் பேசப் போவதாக அங்கு கூறினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், ரவூப் ஹக்கீம், ஆளுநர் அலவி மெளலானா, ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி., வடக்கு – கிழக்கு ஆளுநர்கள், பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், இந்தியத் தூதுவர், முன்னாள் சபாநாயகர் லொக்குபண்டார மற்றும் பலர் பங்கேற்றனர்.
RSS Feed
January 22, 2012
|




0 கருத்துரைகள் :
Post a Comment