animated gif how to

மார்க்க பிரசாரங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு சமய விஸா!

January 23, 2012 |

அரசு கூடுதல் கவனம்
மதம் சம்பந்தமான பிரசார நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருகின்றவர்களுக்கு ‘சமய விஸா’ வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நகர அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி நேற்று தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடனும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடனும்
நடத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாக வெளிநாடுகளிலிருந்து மத பிரசார நடவடிக்கைகளுக்கு வருகின்றவர்களுக்கு சமய விஸா வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா கூறுகையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 161 பேர் சுற்றுலா விஸா பெற்று நாட்டுக்குள் வந்து இஸ்லாமிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்தது.
எமது சட்டப்படி சுற்றுலா விஸா பெற்று வந்து மதப் பிரசாரத்தில் ஈடுபட முடியாது. அதனால் அவர்களை தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். என்றார்.

இதேவேளை, மத விவகார அமைச்சின் உயரதிகாரியொருவர், “வெளிநாடுகளிலிருந்து மதப் பிரசாரத்திற்காக இங்கு வருபவர்கள் சமய விவகார அமைச்சிடம் அனுமதி பெறுவது அவசியம் என்றார். இது தொடர்பாக அமைச்சர் பெளசி மேலும் கூறுகையில்,
சுற்றுலா விஸா பெற்று வந்து மதப்பிர சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று குடிவரவு - குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருடனும், பாதுகாப்பு அமைச்சு செயலாளருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளேன்.

இப்பேச்சுவார்த்தைகளின் போது, “தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் முப்பது, நாப்பது வருடங்களாக சுற்றுலா விஸா பெற்றுதான் இங்கு வந்து முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாத்தை எடுத்தச் சொல்லுகின்றார்கள். இவர்களின் பணி காரணமாக இந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான முஸ்லிம்கள் குர்ஆன், ஸ¤ன்னா (முஹம்மத்) (ஸல்) அவர்களின் வழிமுறைகள் அடிப்படையில் நற்பண்புகள் நிறைந்தவர்களாக திருந்தி வாழுகின்றார்கள். பெரும்பாலான முஸ்லிம்கள் ஐவேளை தொழுகையையும் பள்ளிவாசலில் நிறைவேற்றுவதற்கு இவர்களின் பணி பாரிய பங்களிப்பு செய்து இருக்கின்றது.

என்றாலும் இந்நாட்டின் சட்டப்படி சுற்றுலா விஸாவில் வந்து மதப் பிரசாரத் தில் ஈடுபட முடியாது. ஆனபோதிலும், அவர்களது நற்பணிகளைக் கருத்தில் கொண்டு அவர்களின் பணிகளுக்கென ஏதோ ஒரு வகையில் விஸா வழங்கப் படுவது அவசியம் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.

இதனடிப்படையில் தான் வெளிநாடு களிலிருந்து மத பிரசாரத்திற்கென இங்கு வருகின்றவர்களுக்கு சமய விஸா வழங்கு வது குறித்து கவனம் செலுத்தப்படவிருக் கின்றது என்றார்.

0 கருத்துரைகள் :

Post a Comment

Flag Counter

Free counters!